அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக வளர்ச்சி பாதையில் இணையுங்கள்; ஓ.பி.எஸ்.,

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement
OPS, பன்னீர் செல்வம், துணை முதல்வர், ஓபிஎஸ்., அமெரிக்கா, America

சென்னை : ''தமிழகத்தில் தொழில்புரிவதற்கு, அனைத்து உதவிகளையும் செய்ய, மாநில அரசு தயாராக உள்ளது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில், நீங்கள் அனைவரும் இணைய வேண்டும்,'' என, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள, 'வாட்டர் கேட்' ஓட்டலில், அமெரிக்க - இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பு நிர்வாகிகளை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:அமெரிக்கர்களும், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள். இந்தியாவில், புதிய தொழில் துவங்குவதற்கு ஏற்ற வசதிகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கவுன்சிலுக்கும், தமிழகத்தில் உள்ள, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு இயற்கையானது. 'அமேசான், ஐ.பி.எம்., பாக்ஸ்கான், டெல், போர்டு' உட்பட, 250க்கும் மேற்பட்ட, அமெரிக்க கம்பெனிகளை, தமிழகம்ஈர்த்துள்ளது.தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 'தொழில் பூங்காக்களை' உருவாக்குகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்க, தாமதமின்றி அனுமதி வழங்க, தமிழக அரசு ஒற்றைசாளர முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கு, தனியே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.தொழில் செய்வதற்கு, அனைத்து உதவிகளையும் செய்ய, தமிழகம் தயாராக இருக்கிறது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில், நீங்கள் அனைவரும் இணைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மேலும், அலெக்சாண்ட்ரியாவில், குறைந்த விலை மற்றும் மறுவளர்ச்சி தொழில்நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டுள்ள, வீடுகளின் திட்ட மாதிரிகளையும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் பார்வையிட்டார்; அதன் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.

தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன், உலக வங்கி அதிகாரிகள், வாஷிங்டன் வீட்டு வசதி துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பாராட்டு சான்றிதழ்: அமெரிக்கா - இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பு தலைமை செயல் அலுவலர் எலிசாபுலிவர்த்தி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'தனி சிறப்புமிக்க பொது சேவையாற்றும் சாதனையாளர்' என்ற, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
16-நவ-201920:55:18 IST Report Abuse
Rajas காக்னிசன்ட் நிறுவனத்திற்கு approval வழங்குவதற்காக 14 கோடி ரூபாயை ஒரு முக்கிய தமிழக அதிகாரி கேட்டு அதை அந்த கம்பெனி கொடுத்திருக்கிறார்கள். இதை அமெரிக்கா கண்டு பிடித்து அந்த நிறுவனத்திற்கு 50000 டாலர் அபராதம் விதித்தது. அந்த ஆள் இப்போது எந்த பதவியில் இருக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
16-நவ-201914:38:54 IST Report Abuse
Naren உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து நடத்தப்படும் வெட்டி விளம்பரங்களே இவையெல்லாம். பொறுத்திருந்து பாருங்கள், இதனால் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
16-நவ-201911:17:05 IST Report Abuse
Ganapathy ஸ்டாலினும் கருது ஏதும் சொல்லமறுக்கிறார். நேற்றைக்கு பேப்பர் படித்தபோ " ஓபிஎஸ் டே " என்று கொண்டாட போகிறார்களாம். உள்ளாட்சி தேர்தலில் இவரது சாயம் வெளுக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X