இந்தியாவுக்கு 'எஸ் - 400' ஏவுகணை: புடின் உறுதி

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிரேசிலியா: ''அதி நவீன, 'எஸ் - 400' ஏவுகணைகள், திட்ட மிட்டபடி, இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.இந்திய வான் பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து, அதி நவீன, எஸ் - 400 ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது; இதன் மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஒப்பந்தப்படி,
எஸ் - 400, ஏவுகணை,ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், புடின், இந்தியா, ரஷ்யா

பிரேசிலியா: ''அதி நவீன, 'எஸ் - 400' ஏவுகணைகள், திட்ட மிட்டபடி, இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.

இந்திய வான் பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து, அதி நவீன, எஸ் - 400 ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது; இதன் மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஒப்பந்தப்படி, அடுத்தாண்டுக்குள், முதல் ஏவுகணையை, இந்தியாவிடம், ரஷ்யா ஒப்படைக்க வேண்டும். இதற்கான முதல் கட்ட தொகையாக, 6,000 கோடி ரூபாயை, மத்திய அரசு, ரஷ்யாவுக்கு செலுத்தி உள்ளது. இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, சீனா,இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய மிகவும்வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது: எஸ் - 400 ஏவுகணைகள் தயாரிப்பு பணி திட்ட மிட்டபடி நடக்கிறது. முதல் ஏவுகணை, வரும், 2020க்குள், இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ஏவுகணைகள் தயாரிப்பு மற்றும் ஒப்படைப்பு விஷயத்தில், இந்திய பிரதமர் மோடி, எங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இது தொடர்பான பணிகள் திட்டமிட்டபடி, முறைப்படி நடக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news'ரஷ்யாவிடமிருந்து, ஏவுகணைகளை வாங்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 'இந்தியாவுக்கு தேவையான பொருட்களை யாரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும்; மற்ற நாடுகள் முடிவு செய்ய முடியாது' என, மத்திய அரசு பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறியே, ரஷ்யாவிடமிருந்து, நம் ராணுவத்துக்கு ஏவுகணைகள் வாங்கப்படுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-நவ-201903:51:59 IST Report Abuse
J.V. Iyer மோடிஜிக்கு எல்லா நாட்டு தலைவர்களிடமும் நல்ல நட்பு உள்ளது. பாராட்டுக்கள். அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த நல்ல, நேர்மையான, திறமையான தலைவர்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
16-நவ-201903:36:32 IST Report Abuse
Yezdi K Damo நிலவுக்கு ராக்கெட் அனுப்ப தெரிஞ்ச நமக்கு எஸ் 400 தெரியாதுன்னா எப்படி ? மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் நேரடியா எஸ் 4000 தான் நம்முடைய இலக்கு .அதுவும் 2024 க்குள்ள அந்த இலக்கை அடைந்தே தீருவோம் .
Rate this:
ssm - madurai,இந்தியா
16-நவ-201909:42:18 IST Report Abuse
ssmEven if you know building construction, if you want to build a house you will call a professional mason only. Because he is a profession and you are outsourcing the job. Simple....
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
16-நவ-201913:17:50 IST Report Abuse
Nallavan NallavanYou are under serious mental disorder. Please get treated earliest as possible....
Rate this:
Cancel
16-நவ-201902:40:01 IST Report Abuse
ஆப்பு எல்லார்கிட்டேருந்தும் வாங்குவோம். இதுதான் மேக் இன் இந்தியா கொள்கை.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-நவ-201903:59:25 IST Report Abuse
 nicolethomsonஇல்லைன்னா பாலைவன வந்தேறி கூட்டத்தினர் இந்தியாவை நாசம் செய்து விடுவார்களே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X