பொது செய்தி

இந்தியா

திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி, நூல்

Added : நவ 16, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருப்பதி: திருமலை, ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் நுால் இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஐதராபாதின் மல்காஜிகிரி விஷ்ணுபுரியைச் சேர்ந்த பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு முன், திருமலையில், ஏழுமலையானை தரிசித்து, லட்டு பிரசாதம் வாங்கி, வீடு திரும்பினர். லட்டை உண்பதற்காக உடைத்த போது, அதில் தலைமுடிமற்றும் நுால் இருப்பதை கண்டு
திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி, நூல்

திருப்பதி: திருமலை, ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் நுால் இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐதராபாதின் மல்காஜிகிரி விஷ்ணுபுரியைச் சேர்ந்த பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு முன், திருமலையில், ஏழுமலையானை தரிசித்து, லட்டு பிரசாதம் வாங்கி, வீடு திரும்பினர். லட்டை உண்பதற்காக உடைத்த போது, அதில் தலைமுடிமற்றும் நுால் இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருமலையில், மிகவும் பாதுகாப்பான முறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் கூறிக் கொள்கிறது. ஆனால், அதை மீறி, லட்டில், முடி மற்றும் நுால் போன்றவை இருப்பது, பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையடுத்து, அந்த பக்தர்கள், 'லட்டின் சுகாதாரத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,தேவஸ்தானத்திடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
16-நவ-201907:51:06 IST Report Abuse
.Dr.A.Joseph எவ்வளவுதான் பாதுகாப்பாக மாஸ்க் அணிந்து பணி செய்தாலும் இதுபோல நிகழ்வது இயல்பு.பெரிது படுத்தி உழைப்பை கொச்சை படுத்தாதீர்கள். வேண்டுமென்று யாரும் செய்வதில்லை.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201901:30:09 IST Report Abuse
தமிழவேல் இது இயல்பு என்று சொல்ல முடியாது. நிச்சயமாக வேண்டுமென்று செய்யவில்லை ஆனால், இது அஜாக்கிரதை.... சுத்தம், சுகாதாரத்தை இதுபோன்ற கூட்டமான உணவிடங்களில் சரியாக கடைபிடிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. இதனால் ஒரு தொற்று நோய், அன்று லட்டு வாங்கியவர்களுக்கெல்லாம் பரவினால் ???? உங்கள் தொழிலிலும் இதுபோல நடந்தால் அதுவும் இயல்புதானா ? ஒருமுறை விமானத்தில் "முறுக்கப்பட்ட இரண்டு கம்பி" எனது கேக்கில் இருந்தது. அதுவும் பிசினஸ் க்ளாசில்........
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
16-நவ-201906:44:24 IST Report Abuse
Nathan "லட்டு நஷ்டத்தில் ஓடுதாம்." என்பதெல்லாம் கிடையவே கிடையாது, எல்லாருக்குமே இனாமில் லட்டு தரலாம், அத்தான் தானம் கிடைக்கிறது, இந்த மாற்றுமத நிர்வாகத்தில் இதெல்லாம் வேண்டுமென்றே நடக்கும், பணம் தின்னுவார்கள், அது அவர்கள் வம்சத்தையும்.................
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
16-நவ-201905:14:28 IST Report Abuse
கதிரழகன், SSLC லட்டு மனுசன்தான் செய்யுறான், சாமியா செய்யுது. கோடி கணக்குல லட்டு செய்யுறாங்க, ஒரு லட்டுல ஒரு குறை அதுக்கு இப்படி அலறுறீக ?
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-நவ-201906:12:12 IST Report Abuse
Matt Pலட்டுல நூலோ முடியோ இருந்தது...சரியா போச்சு ...குண்டூசியா இருந்தா உயிரை போக்கிவிடாதா? ..காலத்துக்கு ஏற்றவாறு ஹெட் கவர் (முடி மூடி) அணிய வேண்டாமா?...கையுறையும் தேவ. ..தலையில வூரல் எடுத்தா கூட சொறிஞ்சு தான் ஆகணும் என்று ஆகி விடும். கையை கழுவி புது உறை அணிய வேண்டும் .....லட்டு வியாபாரமும் இந்த செய்திக்கு அப்புறம் புட்டுக்கிட்டு போகலாம். நூலு .முடி 2மும் உயிருக்கும் ஆபத்தாகலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X