லக்னோ:உ.பி.,யைச் சேர்ந்த, பிரபல விவசாய சங்கத் தலைவர் மகேந்திர சிங் திகாயத், உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர்மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங்திகாயத்(76). பாரதிய கிஷான் யூனியன் என்றவிவசாய சங்கத்தின் தலைவர். வட மாநிலங்களில்உள்ள விவசாயிகளின் பிரச்னைகளுக்காக, ஏராளமான போராட்டங்களை சிறப்பாக நடத்தியவர். கிராமப்புற வளர்ச்சிக்காகவும், விவசாயத்துக்காகவும் தீவிரமாக செயல்பட்டவர். கரும்பு விலை,விவசாய கடன் உள்ளிட்ட, விவசாயிகளின்பல்வேறு பிரச்னைகளுக்காக, போராட்டங்கள்நடத்தி சிறை சென்றவர்.கடந்த சில மாதங்களாகவே, எலும்பு புற்றுநோயால், இவர் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், முஜாபர் நகரில் உள்ள அவரது மகன்வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன.திகாயத்தின் மறைவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங்,உ.பி., முதல்வர் மாயாவதி, ஐக்கிய ஜனதா தளதலைவர் சரத் யாதவ், பா.ஜ., மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE