பண்ருட்டி : பண்ருட்டி கெடிலம் ஆற்றுப்பகுதியில் வெள்ளத் தடுப்பு கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டை முதல் நடுவீரப்பட்டு வரையில் கெடிலம் ஆற்றங்கரையில் இருகரைகளும் வெள்ளத்தடுப்பு ஏற்படுத்துதல், வடிகால் வசதிகள் ஏற்படுத்திட கடந்த ஆண்டு 1,436 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கி கடந்த மூன்று மாதங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக இருகரைகளின் வரை பட அளவுபடி நிலஅளவைத் துறை சார்பில் அளக்கப்பட்டு இருபுறங்களிலும் கரைகள் பலப்படுத்தும் பணிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நடந்து வருகிறது. இதற்கான பணியை சென்னை சேர்ந்த ஜி.வி.ஆர்., இன்பராஸ்ட்ரெக்சர் என்கிற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பண்ருட்டி நகர எல்லையில் கெடிலம் ஆற்றுபாலம் அருகில் இருந்து பில்லர்கள் அமைத்து வெள்ளத் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE