உள்ளடி வேலையால் முக்கிய தலைகள் உருண்டது : காலை வாரியது கூட்டணி கட்சிகள்

Added : மே 15, 2011 | |
Advertisement
கடலூர் : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிடக் கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலையால் போட்டியிட்ட முக்கிய தலைகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். கட்சிக்கட்டுப்பாடு, கொள்கைகளை மறந்து சுயலாபத்தை கருத்தில் கொண்டு செயல்படும் அள வுக்கு இன்று திராவிட கட்சிகள் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தங்களது கட்சித் தலைவர்களின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு

கடலூர் : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிடக் கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலையால் போட்டியிட்ட முக்கிய தலைகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். கட்சிக்கட்டுப்பாடு, கொள்கைகளை மறந்து சுயலாபத்தை கருத்தில் கொண்டு செயல்படும் அள வுக்கு இன்று திராவிட கட்சிகள் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தங்களது கட்சித் தலைவர்களின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு செய்வது, தலைவருக்காக உயிரைக்கூட மாய்த்து கொள்ளக்கூடிய உண்மையான தொண்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ள நிலையில், கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் சுயலாபத்திற்காக "போலி' நாடகம் போட்டு வேட்பாளரின் துண்டை உருவும் கலை நடந்து முடிந்த தேர்தலில் உருவெடுத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி நிற்கும் ஜாதி பிரச்னை, வேட்பாளரை உள்ளூர், வெளியூர் என பிரித்து பார்ப்பது, முன்னணி நிர்வாகிகள் பெருந்தொகை எதிர்பார்ப்பு, கோஷ்டி பூசல், பிடிக்காத வேட்பாளராக இருந்தால் மாற்றுத் தொகுதியில் சென்று பணியாற்றுவது போன்றவைகள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு தமது கட்சிக்காரர்களையே தோற்கடிப்பது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இவனை பிடிக்க முடியாது, நாம் ஏன் அவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் போலி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் புரையோடிப்போய் உள்ளது. கடலூர் தொகுதியில் அய்யப்பன் மீது கட்சி மேலிடம் எடுத்த நடவடிக்கையால் அவர் அ.தி.மு.க., வில் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கி அ.தி.மு. க.,விற்கு ஓட்டு வேட்டையாடினார். இதனால் கடைசி நேரத்தில் தி.மு.க., வின் ஓட்டுகள் சிதறி அ.தி.மு.க., விற்கு சாதகமானது. இது கடலூர் தொகுதியில் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் பிரதிபலித்தது. பண்ருட்டி தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும்போது "சுருட்டல்' வேலையில் ஈடுபட்டனர். இதையறிந்த சபா ராஜேந்திரன் தமக்கு நெருக்கமானவர்களை அனுப்பி பணப்பட்டு வாடாவில் ஈடுபடும்போது, வெளியூர்காரர்கள் இங்கு வந்து பணம் கொடுப்பதா? வெற்றி பெறுவதை ஒரு கை பார்க்கிறோம் என எதிர் முழக்கமிட்டனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூட்டணி கட்சிகளின் உள்ளடி வேலையால் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிருந்தது. வாண்டையாருக்கு ஆதரவாக முழுமனதோடு கூட்டணி கட்சிகளான பா.ம.க., - வி.சி., ஆதரவு கொடுக்கவில்லை.
பழைய "கதையை' மனதில் கொண்டு வெற்றி பெற்றால் என்னாகுமோ? என கண்டும் காணாமல் ஒதுங்கி விட்டனர்.
நெய்வேலி தொகுதியில் தொ.மு.ச.,வின் உள்ளடி வேல்முருகனின் வெற்றி பறிபோனது. வெற்றி வாய்ப்புக்கு வேண்டிய ஓட்டுக்களைப்போல் 3 மடங்கு தொ.மு.ச., மற்றும் குடும்பத்தினர் ஓட்டுகள் இருப்பது நினைவு கூறத்தக்கது. இதேப்போன்று திட்டக்குடி தொகுதியிலும் கூட்டணி கட்சிகள் முழு ஆதரவு கிடைக்கவில்லை. இதன் விளைவாக கூட்டணிக் கட்சிகளின் பலம் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கு சாதகமாக இருந்தாலும் கூட கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலையால் பல முக்கிய தலைகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X