குடிகார மன்னர்கள்: காங்., எம்எல்ஏ பேச்சுக்கு பாஜ கண்டனம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (25)
Advertisement
Madhya Pradesh, Congress MLA, alcohol barb, legendary king,kicks up row, குடிகார மன்னர்கள், காங்கிரஸ், காங்., எம்.எல்.ஏ., பா.ஜ., பாஜ, கண்டனம், பிருத்விராஜ் சவுகான், அரசர்கள்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியை ஆட்சி செய்த பிருத்திவிராஜ் சவுகான் மற்றும் சில மன்னர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக காங்., எம்.எல்.ஏ., பேசியதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ம.பி., மாநிலம் சபல்கர்க் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பைஜ்நாத் குஷ்வாகா, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்ச ஒன்றில் பேசுகையில், ''டில்லியை ஆட்சி செய்த பிருத்விராஜ் சவுகான், மகோபாவை ஆட்சி செய்த மன்னர் பரிமல், கன்னூஜை ஆட்சி செய்த மன்னர் ஜெயசந்த் ஆகியோர் பெரிய அரசர்கள். ஆனால், அவர்கள் மதுவிற்கு அடிமையானதால்,( இதனை அவர் சைகை மூலம் செய்து காண்பித்தார்) அவரது அரண்மனை மற்றும் கோட்டைகளில் தற்போது, வவ்வால்கள் பறக்கின்றன. அவரது பெயரை யாரும் முன்னெடுத்து செல்லவில்லை. யாரும் மது பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ துவங்கியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மாநில பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் மிகச்சிறந்த மன்னர்கள் பற்றிய காங்கிரசின் மனநிலை தெரியவந்துள்ளது. நேரு குடும்பத்தினர் நலனை மட்டுமே அக்கட்சி கவனத்தில் கொண்டுள்ளது.வரலாற்றி சிறப்பு வாய்ந்தவர்களை, மாணவர்கள் முன்னிலையில், குஷ்வாகா அவமதித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்பது முக்கியம் அல்ல. பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். குஷ்வாகா மீது மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குஷ்வாகா மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளை ஊக்கப்படுத்தவே, அரசர்கள் பற்றி கூறினேன். ஆனால், எந்த நபரையும், ஜாதி மற்றும் மதத்தை இழிவுபடுத்துவது நோக்கம் அல்ல. எனது கருத்து யாரையாவதுபுண்படுத்தி இருந்தால், அதற்கு மன்னிபபு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
16-நவ-201914:22:27 IST Report Abuse
HSR பட்டாயா போய் அஜால் குஜால் பண்ண கூடாது போதை மருந்து எடுத்துக்க கூடாது என்றும் சொல்லியிருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
16-நவ-201914:06:57 IST Report Abuse
sudhanthiran. இது நேரு பரம்பரையென்று அடையாளப்படுத்த லாயக்கற்றவரும் அதன் விழுதுகளும் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
16-நவ-201912:36:41 IST Report Abuse
பச்சையப்பன் அவர் பேசியதில் என்ன தவறு? அந்தக் கால மன்னர்கள் என்ன யோக்யர்களா?? அனைவரும் மக்கள் பணத்தில் குடித்து கூத்தடித்தவர்கள்தான்.. அதனால் தான் அன்று அன்னை இந்திரா மன்னர்களை அடித்து விரட்டினார். பெரும் மன்னர்கள் மட்டுமே குடித்து வந்த உயரிய சரக்கை பாமர மக்களுக்கும் எளிதாக கிடைக்க செய்தவர் எங்கள் தானைத் தலைவர் 1ம் கலைஞர். இதனால்தான் குடிமகன்களால் அவர் கொண்டாடப் படுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X