இலங்கை தேர்தல்: இந்தியா ஒதுங்கியதா? ஒதுக்கப்பட்டதா?

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (35)
Advertisement
இந்தியா, இலங்கை, அதிபர் தேர்தல், கோத்தபய ராஜபக்சே, சீனா,

கொழும்பு : இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில், இந்தியா ஒதுங்கி நிற்கிறது. இலங்கையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்தியா ஒதுக்கப்பட்டதா அல்லது ஒதுங்கி நிற்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கோத்தபய ராஜபக்சே வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த தேர்தலில் இந்தியா எந்த பங்களிப்பும் அளிக்கவில்லை. இலங்கையும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து கூறப்படுவதாவது: இந்தியாவின் உதவி மூலம் தான் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில், ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. போர் முடிந்ததும், இலங்கையில் சீனாவின் அதிக்கம் அதிகரித்தது. ராஜபக்சேவும் சீனாவுடன் நெருக்கமானார். கோத்தபயா வென்றால், சீனாவின் அதிக்கம் மீண்டும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.





இந்தியாவை கண்காணிக்கவும், இந்திய கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவும் தான் இலங்கையை கட்டுப்படுத்த சீனா முயற்சி செய்கிறது. கோத்தபயா ராஜபக்சே மற்றும் சஜித் ஆகியோர் வெற்றி பெற்றாலும் இந்தியாவிற்கு எந்த நன்மையும் இல்லை.
இலங்கை போருக்கு பின், இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவையில்லாமல் போனது. இலங்கையை ஆட்சி செய்தவர்களும் எதிர்பார்க்கவில்லை. இலங்கையில், இந்தியாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. தேர்தல் முடிவுகளால் இந்தியாவுக்கு எந்த பயனும் இருக்க போவதில்லை என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-201920:49:08 IST Report Abuse
srinivasalu.santhakumar ஏன் சீனாவின் மூலமாக பாகிஸ்தான் பயங்கரவாத்தை கொண்டு வராது என்று ஏதாவது உத்திரவாதம் உண்டா?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-நவ-201919:19:09 IST Report Abuse
Sampath Kumar இந்தியா என்னத்துக்கு அண்டை நாட்டில் மூக்கை நுழைக்க வேண்டும் ? உங்க நாட்டின் அக்க போரை உங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல இது ஒரு செய்தி
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
16-நவ-201918:56:03 IST Report Abuse
spr "இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில், இந்தியா ஒதுங்கி நிற்கிறது. இலங்கையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்தியா ஒதுக்கப்பட்டதா அல்லது ஒதுங்கி நிற்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது" அடுத்த நாட்டின் தேர்தலில் இந்தியா ஏன்பங்கேற்க வேண்டும்/ தலையிட வேண்டும். அப்படிச் செய்தால், காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்வதனை எதிர்க்க நமக்கு தார்மீக உரிமையே இருக்காதே சும்மாவானும் ஒரு செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடுவது எல்லா ராஜரீக உறவுகளை தந்திரங்களை அறிந்தவர் போல செய்தி வெளியிடுவது சரியல்ல. காங்கிரசும் திமுகவும் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது அதனாலேயே சீனா அங்கே தளம் அமைக்க இலங்கையை ஆதரிக்கிறது முன்பு புலிகள் விவகாரத்தில் தேவையின்றி தலையிட்டு பிறகு முடியும் முன்னரே பின் வாங்கியது காங்கிரஸ். அதன் பலனை நாம் இன்னமும் அனுபவிக்கிறோம் மறுமுறையும் தலையிடுமுன் ஆலோசிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X