பொது செய்தி

இந்தியா

டில்லி... காற்று மாசில் ‛‛கில்லி''

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Delhi, World, Most Polluted City, Indian Cities, Top 10, டில்லி , காற்று மாசு, மும்பை, சென்னை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய தலைநகர் டில்லி முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கோல்கட்டா, மும்பையும் முறையே 5 மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளன.

ஆய்வை நடத்திய ஸ்கைமெட் நிறுவனம் கூறியதாவது: காற்று மாசு அளவு 527 புள்ளிகளை பெற்று, உலகின் மாசடைந்த நகரங்களில் டில்லிக்கு முதலிடத்தை பெற்று கொடுத்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களில்
2வது இடத்தில், பாகிஸ்தானின் லாகூர் -234
3வது இடத்தில் உஸ்பெகிஸ்தானின் தாஸ்கண்ட் - 185
4வது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி - 180
5வது இடத்தில் கோல்கட்டா -161
6வது இடத்தில் சீனாவின் செங்கு -158
7 வது வியட்நாமின் இடத்தில் ஷானோய் - 158
8 வது இடத்தில் சீனாவின் குவாங்சு -157
9வது இடத்தில் மும்பை 153
10 வது இடத்தில் நேபாளத்தின் காத்மாண்டு -152 புள்ளிகள் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்(Air Quality Index) என்ற அளவில் AQI என குறிக்கப்படுகிறது. இதன் அளவு 0 - 50 புள்ளிகள் இருந்தால், சிறப்பானது எனவும், 51- 100 என இருந்தால், போதுமானது எனவும், 101- 200 என இருந்தால் காற்று சற்று மாசடைந்துள்ளது எனவும் 301-400 என இருந்தால்காற்று மாடைந்துள்ளது.401-500 என இருந்தால் காற்று மோசமாக மாசடைந்துள்ளது என குறிக்கப்படுகிறது.

தலைநகர் டில்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இதற்கு பலன் கிடைக்கவில்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் எழும்புகை டில்லியை சூழ்ந்திருப்பதன் காரணமாகவே டில்லியில் காற்று மாசடைந்துள்ளதாக டில்லி அரசு கூறி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-நவ-201915:49:38 IST Report Abuse
Endrum Indian ஆக ஓகோ என்று குதிக்கின்றார்களே டில்லியில் மாசு என்று அப்படி பார்த்தால் கொல்கத்தாவில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் மங்கலாக தெரிகின்றது 16 ஆவது மாடியிலிருந்து இந்த நவம்பர் மாதம் முதல் இதற்கு முன் 5 கி.மீ. வரை தெளிவாகத்தெரிந்தது. இந்த பனிக்காலத்தில் மாசு மேலே எழும்ப முடியாதவாறு பனி தடுப்பதால் இப்படி நடக்கின்றது. பனிக்காலம் முடிந்தவுடன் சரியாகி விடும். டில்லியில் மாசு படர ஹரியானாவில் மற்றும் பஞ்சாபில் வயல்வெளியில் எரியும் வைக்கோல் / கோதுமை போக மீதி உள்ள சுள்ளிகள், உமி .......பாகம் தான். அதுவும் பனிக்காலத்தில் இது நிச்சயம்???இது இது ஒன்றும் இன்று நேற்று நடப்பதல்ல பலப்பல வருடங்களாக நடக்கின்றது?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-நவ-201915:43:30 IST Report Abuse
Endrum Indian ஆக ஓகோ என்று குதிக்கின்றார்களே டில்லியில் மாசு என்று அப்படி பார்த்தால் கொள்கைத்தடவைலும் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் மங்கலாக தெரிகின்றது 16 ஆவது மாடியிலிருந்து இந்த நவம்பர் மாதம் முதல் இதற்கு முன் 5 கி.மீ. வரியா தெளிவாகத்தெரிந்தது. இந்த பனிக்காலத்தில் மாசு மேலே எழும்ப முடியாதவாறு பனி தடுப்பதால் இப்படி நடக்கின்றது. பனிக்காலம் முடிந்தவுடன் சரியாகி விடும். டில்லியில் மாசு படர ஹரியானாவில் மற்றும் பஞ்சாபில் வயல்வெளியில் எரியும் வைக்கோல் / கோதுமை போக மீதி உள்ள சுள்ளிகள், உமி .......பாகம் தான். இது இப்போது அல்ல??அதுவும் பனிக்காலத்தில் இது நிச்சயம்???இது ஒன்னும் இன்று நேற்று நடப்பதல்ல பலப்பல வருடங்களாக நடக்கின்றது??இதில் சொறிவாளின் உளறல் இந்த வருடம் தான் ஏதோ நடப்பது மாதிரி செய்திகளில் இடம் பெறுவது வேடிக்கையிலும் வேடிக்கை???/
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-நவ-201915:23:11 IST Report Abuse
A.George Alphonse டிஜிட்டல் இந்தியா பசுமை இந்தியாவாக மாறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X