பொது செய்தி

இந்தியா

பல் சரியில்லையா? : விண்வெளிக்கு போக முடியாது

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வீரர்கள் தேர்வின் போது, பல் சரியில்லை என்ற காரணத்திற்காக பலர் நீக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.ககன்யான் திட்டத்திற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய நிபுணர்கள் மூலம் நடைபெற்ற இந்த தேர்விற்கு 60 விமானிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக

புதுடில்லி : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வீரர்கள் தேர்வின் போது, பல் சரியில்லை என்ற காரணத்திற்காக பலர் நீக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.



latest tamil news


ககன்யான் திட்டத்திற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய நிபுணர்கள் மூலம் நடைபெற்ற இந்த தேர்விற்கு 60 விமானிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக இந்திய விமானப்படையின் விண்வெளி மருத்துவ மைய நிபுணர்களால் 3 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பிறகு நடந்த உடல் தேர்வில் 60 விமானிகளில் 12 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, கடந்த 45 நாட்களாக ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுள் 7 பேர் தற்போது பயிற்சியை முடித்துள்ள நிலையில், இறுதியாக 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இறுதி தேர்வு 2022 ம் ஆண்டு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news




ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்வில் வெளியேறியவர்களில் பலருக்கும் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும், விண்வெளியிலுள்ள சூழ்நிலை மாற்றத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்பதே அவர்கள் தேர்வாகாததற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-நவ-201916:23:13 IST Report Abuse
வெகுளி பல பக்கோடாக்களை தின்று பல் வலிமையை நிரூபித்துள்ள எங்கள் சுடலையையும் இரண்டாம் சுடலையையும் விண்வெளிக்கு அனுப்பலாம்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-நவ-201915:53:24 IST Report Abuse
Endrum Indian என்ன ஒரு அழகான follow up நம்முடைய தமிழ் பழமொழியை. பல் போனால் சொல் போகும், பல் இருக்கிறவன் பக்கோடா தின்னுகின்றான். அதிகமாக பேசினால் அப்படியே பல்லில் போட்டு விடுவேன். ஒரு வேளை இதை அச்சு பிசகாமல் படித்து அதன் படி நடக்கின்றார்களோ???
Rate this:
R S BALA - Tiruvallur,இந்தியா
16-நவ-201917:13:00 IST Report Abuse
R S BALA😁...
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-நவ-201915:13:30 IST Report Abuse
Pasupathi Subbian பள்ளு போனால் சொல்லு போகும் என்று பழமொழி உண்டு. ஆனால் விண்கலத்தில் செல்லமுடியாது என்பது இப்போது புதிய மொழி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X