பொது செய்தி

இந்தியா

சபரிமலை வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (28)
Advertisement
சபரிமலை, பெண்கள்,  போலீஸ், பம்பை,

இந்த செய்தியை கேட்க

சபரிமலை: சபரிமலைக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த, 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் 10 பேரை, பம்பையில் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பினர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இதனால், இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு சபரிமலை கோவிலுக்கு வருவோம் என சில பெண் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள், சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

'சபரிமலை வழக்கு, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மண்டல பூஜையின் போது, 10 முதல், 50 வயது வரையிலான பெண்களை, சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, கேரள அரசுக்கு, அம்மாநில அட்வகேட் ஜெனரல் ஆலோசனை வழங்கி உள்ளார்.

அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு வரும் வரை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10- 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலுக்குள் சென்றே தீருவேன் என பிடிவாதம் பிடிப்பவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி உத்தரவு வாங்கி வர வேண்டும் என்றார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 10 பேர் சபரிமலை செல்வதிற்காக இன்று பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை நடத்தினர். அதில், அவர்களின் வயது 50க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்துக்கூறிய போலீசார், அவர்களை திருப்பி அனுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvam - Chennai,இந்தியா
16-நவ-201920:16:53 IST Report Abuse
selvam மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மதங்களும் அவற்றின் சடங்கு சம்பிரதாயங்களும் உலகம் முழுசும் பிரச்சினை மட்டுமே ஏற்படுத்துகின்றன.. இது விதிவிலக்கில்லை ..கடவுள் நம்பிக்கை உடையோர் அனைவரும் ஒழுக்க சீலர்களும் உண்மை நேர்மை அன்பு கருணை உடையோர்களாக இருந்திருந்தால் உலகில் வாழ்க்கை நடப்புகள் எவ்வளோவோ நன்றாக இருந்திருக்கும் ..வெறுமே அந்த சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமே முக்கியம் என்று வீம்பு பண்ணுகிறவர்கள் அதை எதிர்ப்போர் இடையே பிரச்சினை தானே வரும்..
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
16-நவ-201921:33:58 IST Report Abuse
JSScommies போல பேசுகிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-201917:37:30 IST Report Abuse
krishna Appadiye andga pathu pengalayum kattukulle kondo poi pathu naal vaithirundhu anuppalame
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
16-நவ-201916:49:49 IST Report Abuse
sudhanthiran. நிறைய நண்பர்களை இந்த செய்தியில் காணோமே? அவ்வளவு முக்கியமில்லை என நினைக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X