பொது செய்தி

தமிழ்நாடு

உதயநிதி பற்றிய பதிவு போலி: ‛வில்லங்க' ஸ்ரீரெட்டி விளக்கம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (66)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: நடிகர் உதயநிதி மீது தான் கூறியதாக வெளியான பேஸ்புக் பதிவு பொய்யானது. அவர் யார் என்றே எனக்கு தெரியாது என நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, தன்னுடன் படுக்கையை பகிர்ந்து வாழ்க்கையை சீரழித்தது மட்டுமல்லாமல் வாய்ப்புத் தராமல் ஏமாற்றிவிட்டனர் என தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரின் பெயர்களை பட்டியலிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. தொடர்ந்து பேஸ்புக்கில் முன்னணி பிரபலங்கள் பலர் செய்த சல்லாபங்களை பட்டியலிட்டு வருகிறார்.






சில நாட்களுக்கு முன்னர் நடிகர் உதயநிதி, ஐதராபாத் ஓட்டலில் தன்னுடன் உல்லாசமாக இருந்தார் என இவர் பதிவிட்டதாக பேஸ்புக்கில் தகவல் பரவியது. இதுபற்றி செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன் என ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

அதன்படி செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி, கருணாநிதியின் குடும்பம் மீது மரியாதை வைத்திருக்கிறேன். உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. அவரைப் பற்றி போலியாக போடப்பட்ட பதிவு, என்னுடைய பேஸ்புக் கணக்கு அல்ல. போலியான கணக்கில் யாரோ பதிவிட்டு உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். என் பெயரில் போலியான பல பேஸ்புக் பக்கங்கள் உள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்.





நிறைய நடிகைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் சொல்வதில்லை, நான் அவர்கள் சார்பாக பேசுகிறேன். இதற்கு திரையுலகில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் ஆதரிக்கின்றனர்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்துக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்.

நான் நல்லவள் இல்லை ஒத்துக் கொள்கிறேன். தவறும் செய்திருக்கிறேன். அதை திருத்தவே முயற்சிக்கிறேன். பட வாய்ப்பிற்காக நான் படுக்கையை பகிர்ந்தது உண்மை தான். இனி அது போன்று நடக்க கூடாது என்பதே என் எண்ணம்.





ஏன் கோர்ட்டிற்கு போகவில்லை என்கிறார்கள். என்னை ஏமாற்றியவர்களை முடிந்தவரை நான் டேமேஜ் செய்துவிட்டேன். நான் வழக்கு போட்டிருந்தால் கோர்ட், கேஸ் என அலைந்து இருப்பேன். ஆண் - பெண் இருவருக்கும் பிடித்திருந்தால் செக்ஸ் பண்ணலாம் என சுப்ரீம் கோர்ட்டே சொல்கிறது. அதை தான் நான் செய்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி ஏமாற்றாதீர்கள். அப்படி செய்தால் கண்டிப்பாக மீடூவில் புகார் செய்வேன்.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-201904:58:55 IST Report Abuse
Ganesan Madurai அவன் ராமனுமல்ல இவள் சீதையுமல்ல.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-நவ-201904:41:25 IST Report Abuse
meenakshisundaram என்னமோ போ மாதவா யாரோ அப்பப்போ இந்த மாதிரி ஆளுங்களை பயமுறுத்திடறாங்களோன்னு சந்தேகமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201904:34:19 IST Report Abuse
Mani neeye pannitaalym.... Thrisha kitta kelu sollum....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X