பொது செய்தி

இந்தியா

அம்னெஸ்டி அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: மனித உரிமை அமைப்பான, ஆம்னெஸ்டி இந்தியா, வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதியுதவி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த அமைப்பின் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூருவில் 3 இடங்களிலும், டில்லியில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.






இது தொடர்பாக சிபிஐ வெளியிட்ட அறிக்கை: உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 5ம் தேதி, அம்னெஸ்டி சர்வதேச இந்திய அமைப்பு, இந்தியர்களுக்கான அம்னெஸ்டி சர்வதேச டிரஸ்ட், அம்னெஸ்ட் சர்வதேச இந்திய தொண்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அமைப்புகள், சட்டவிரோதமாக, அம்னெஸ்ட் சர்வதேச இந்திய அமைப்பு நிறுவனம் மூலம் இங்கிலாந்து சர்வதேச அம்னெஸ்டி அமைப்பிடம் இருந்து பணம் பெற்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




சிபிஐ சோதனை தொடர்பாக, அம்னெஸ்டி அமைப்பு கூறுகையில், நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பாக பேசுவதால் சோதனை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து தொடர்ந்து பேசுவோம். இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம். இந்தியா ஆனாலும், எந்த நாடாக இருந்தாலும், மனித உரிமைக்காக துணை நிற்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அம்னெஸ்டி இந்தியாவின் இந்திய தலைவர் அகர் படேல் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் சில மணி நேரம் அலுவலகத்தில் இருந்தனர். சில கேள்விகளையும், சில ஆவணங்களையும் கேட்டனர். எங்களிடம் கேட்டதை நாங்கள் அளித்துவிட்டோம். அவர்களிடம் கூற வேண்டியதை கூறிவிட்டோம். இந்திய அரசின் நான்காவது அமைப்பு எங்களது அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். நாங்கள் தவறு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதில் முறைகேடு தொடர்பாக அம்னெஸ்டி அமைப்பு மீது மத்தய அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அந்த அமைப்பை தீவிரமாக கண்காணித்து வந்தது. கடந்த ஆண்டு , அம்னெஸ்டி அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-201903:41:46 IST Report Abuse
Ganesan Madurai தேசவிரோத கூடாரம் அழித்தொழிக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
16-நவ-201922:33:45 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலை அங்கேந்து தானே தோத்திரம் தோத்திரமா காசு டிரான்ஸ்பராகுது
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
16-நவ-201922:06:48 IST Report Abuse
Rajas முதலில் பாய்ந்து பாய்ந்து ரெய்டு நடத்துவார்கள். அப்போது கோடி கோடியாக பணம், சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படும். அப்புறம் நீண்ட அமைதி. எதுவும் யாருக்கும் தெரியாது. திரும்பவும் அதே கதை வேறு இடத்தில.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X