பொது செய்தி

தமிழ்நாடு

திரையரங்குகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் - அமைச்சர்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (10)
Advertisement
திரையரங்கு, திருவள்ளூர், திருக்குறள் ,அமைச்சர்,

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை முதன்முதலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றது அதிமுக தான். அதன் பின் தான் திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் உள்ள வார்டுகளில் சுழற்சி முறையில்யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் முன்பு திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல் திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்கு பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால் தான் ஆட்சி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் வெற்றிடம் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் மட்டுமல்ல தமிழகத்தையே வழி நடத்தி வருகின்றனர். வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம் எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை.
பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டுக்குள் நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-நவ-201904:47:45 IST Report Abuse
J.V. Iyer அமைச்சர் அவர்களே திருவள்ளுவ நாயனாருக்கு பழைய வடிவத்தை (ருத்ராட்சம், விபூதி, காவி உடை, பூணூல்) கொண்டு வருவீர்களா? இந்த சரித்திர உண்மையை மறைத்த தேச துரோகிகளை தண்டிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-நவ-201904:38:55 IST Report Abuse
meenakshisundaram அப்போ திருக்குறளையும் திருவள்ளுவரையும் தமிழன் மறந்துட்டான்னு முடிவுக்கு வந்தாச்ச்சா ?இல்லியே ,இப்படித்தானே அவனவன் திருவள்ளுவர் தனக்கு சொந்தக்காரனு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க இதுலே வேடிக்கை என்னனா இதே போல எத்தனையோ மொழி பேசும் மக்கள் அவரவர் மொழில ஆரம்பிச்சுட்டாங்கன்னா ?உண்மையிலே திருவள்ளுவர் தெலுங்கு பேசுபவராகக்கூட .மற்றும் சமஸ்க்ரிதம் அறிந்திருந்தவராகக்கூட இருந்திருக்க வாய்ப்புண்டு .
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
17-நவ-201900:17:06 IST Report Abuse
jagan திருவள்ளுவர் மட்டும் காவி உடை இல்லை என்றால், திரை கிழிக்கப்படும். அது போன்ற திரைஅரங்குகள் தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X