பா.ஜ., 'மேட்ச் பிக்சிங்': சிவசேனா தாக்கு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (27)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் பா.ஜ., குதிரை பேரம் நடத்தி வருவதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, பா.ஜ.,வை கடுமையாக விசாரித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.





அந்த கட்டுரையில், பா.ஜ., தலைவர்களான அமித்ஷா, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உள்ளிட்டோர் தங்கள் கட்சியிடம் 119 எம்எல்ஏ.,க்கள் (14 சுயேட்சைகள் உட்பட) ஆதரவு உள்ளதாக கூறி வருகின்றனர்.
பா.ஜ.,வின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். பெரும்பான்மை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் பா.ஜ., முயற்சித்து வருகிறது.




145 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் தங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா நேற்று கூறுகிறார். இது அரசியல் சாசனத்தின்படி தவறு. பெரும்பான்மை இல்லாத போதும் தங்கள் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக கவர்னரை சந்திக்க உள்ளதாக கூறுகின்றனர். அப்படியானால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன் மட்டும் ஏன் பெரும்பான்மை இல்லாமல் போனது?




கிரிக்கெட் மற்றும் அரசியலில் எப்போது, எது வேண்டுமானாலும் நடக்கும் என கட்காரி கூறுகிறார். அப்படி பார்த்தால் குறைவான கிரிக்கெட்டும் நிறைய வியாபாரமும் நடந்து வருகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி பா.ஜ., மேட்ச் பிக்சிங் செய்து வருகிறது. கிரிக்கெட்டை போன்று சூதாட்டம் ஆரம்பமாகி விட்டதால் வெற்றி சந்தேகத்திற்குரியது. மேட்ச் பிக்சிங் போன்று அரசியல் சூதாட்டத்தை, குதிரை பேரமாக பா.ஜ., நடத்தி வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
17-நவ-201913:09:46 IST Report Abuse
Harinathan Krishnanandam ஒரு மாற்றத்திற்காக நாட்டில் முதல் முறையாக குடியரசு தலைவர் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தை களைத்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் இது நாட்டு மக்களை ஒருமித்த கருத்து எடுக்க வைக்கும்
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
16-நவ-201922:11:07 IST Report Abuse
சமத்துவம் உண்மையில் பெரும்பான்மை மக்கள் பாஜக வுக்கு தானே ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நாட்டின் நலனை மனதில் கொண்டு சிவ சேனா மற்றும் திமுக போன்ற தீவிர மக்கள் உணர்வு விரோத கட்சிகளை பொறுப்பான பதவிகளுக்கு தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
16-நவ-201921:21:23 IST Report Abuse
sri அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா காங், பவார் மடியில் விழுந்த சிவசேனா இதோட காலி. ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X