ஆபத்தில் இருந்த இந்திய விமானத்திற்கு உதவிய பாக்.,

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (32)
Advertisement

இஸ்லாமாபாத் : கடும் மழை மற்றும் மோசமான வானிலையில் சிக்கிய இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை உதவிய சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.









நவ.16ம் தேதி ஜெய்ப்பூரிலிருந்து பாக்., வழியாக மஸ்கட் பறந்த இந்திய விமானம் மின்னல்கள் மற்றும் மோசமான வானிலையில் சிக்கி, தடுமாறியது. அப்போது மேடே எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார்.
உடனே களத்தில் இறங்கிய பாக்., விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இந்திய விமானத்தை உரிய நேரத்தில் வழிநடத்தி ஆபத்திலிருந்து மீட்டார். இது முற்றிலும் எமர்ஜென்சி விமானப் போக்குவரத்து உதவியாக வழிநடத்தப்பட்ட ஒன்று.
பாக்., வான்வெளியில் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் விமானம் செல்ல உதவினார். தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையைச் சந்தித்ததாக விமானப் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பாக்., உதவிய ஜெய்ப்பூர் - மஸ்கட் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, இந்திய விமானங்கள் பாக்., வான்வெளியை பயன்படுத்த பாக்., தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201912:55:18 IST Report Abuse
Sampath Kumar மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை வாழ்த்துக்கள. சிலர் இதை கவனிக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
r.krishnamoorthy - chennai,இந்தியா
17-நவ-201912:20:12 IST Report Abuse
r.krishnamoorthy உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே. உணர்ந்து கொள்ளுங்கள் மனிதர்களே. வேற்றுமை வேண்டாம் . ஒற்றுமை ஓங்குக.
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
17-நவ-201907:38:38 IST Report Abuse
Pandiyan மனிதாபிமானம் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு பாராட்டுக்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X