நண்பன் உயிரிழப்பை வீடியோ எடுத்த சகாக்கள்

Added : நவ 16, 2019 | கருத்துகள் (18)
Advertisement
நண்பன், உயிரிழப்பை, வீடியோ ,எடுத்த, சகாக்கள்

பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தில் தங்களுடைய நண்பன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை மற்ற சகாக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் கலாபுர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று மாலை வாலிபர்கள் சிலர் குளிக்க சென்றுள்ளனர்.
குளித்துக்கொண்டிருக்கும்போது ஜாபர் என்ற வாலிபர் கரைக்கு நீந்தி வர முயற்சித்தார். ஆனால், நீந்த இயலாமல் நீரில் தத்தளித்தார். கரையில் நின்ற அவரது நண்பர்கள் அவரை பார்த்து ரசித்தனர்.அதன் பின் தான் மூழ்குவதை உணர்ந்த ஜாபர் கையை தண்ணீரின் மேற்பரப்பில் உயர்த்தி நண்பர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால், நண்பருக்கு உதவ முன்வராமல் அவர் மூழ்குவதை வீடியோவாக பதிவு செய்தனர். இதையடுத்து, நீரீல் மூழ்கிய ஜாபர் மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
22-நவ-201917:37:10 IST Report Abuse
Somiah M தளபதி என்ற திரை படத்தில் ரஜினியும் ,மம்முட்டியும் நண்பர்கள் .அதில் ஒரு காட்சியில் ரஜினியை சந்தேகப் பட்டு மம்முட்டி ஒரு கேள்வி கேட்பார் .அதற்கு ரஜினி "நட்பு என்றால் என்னவென்று தெரியுமா ,நண்பன் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா " என்று கேட்பார் . இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப் பட்ட நண்பர்களிடம் இதே கேள்வியைதான் கேட்க தோன்றுகிறது .
Rate this:
Share this comment
Cancel
Bala Iyer - Tirunelveli,இந்தியா
21-நவ-201915:04:49 IST Report Abuse
Bala Iyer நாம் பல அடிப்படை கருத்துக்களையே மறக்க மட்டுமல்ல அவைகளை என்னைப்போன்ற ஆசிரியர்கள் சொல்லும்போது மாணவமணிகள் மட்டுமல்லாது கூட பணிபுரியும் கூட்டங்களே எள்ளி நகையாடுகின்றனர். தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் ஒரு குணம் உண்டு. பாரபட்சம் இல்லாமல் பலன் கொடுக்கும், எனவே இவற்றில் கவனம் கொள்வது நல்லது/ எல்லாவற்றையும் போட்டோ எடுப்பதையும் தவிர்க்கலாம். செய்வோமா? நகையாடுங்கள். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-நவ-201910:08:19 IST Report Abuse
Jayvee kolaiyum செய்வான் நண்பன்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X