டைபாய்டுக்கு புதிய தடுப்பூசி: முதலில் அறிமுகப்படுத்திய பாக்.,

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (17)
Advertisement

இஸ்லாமாபாத்:உலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதன் முறையாக தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம் செய்துவைத்துள்ளது. பாகிஸ்தானின்சிந்து மாகாணத்தில் டைபாய்டு காய்ச்சலில் ஏராளமானோர் ஆண்டுதோறும் உயிரிழப்பதால், அங்கு முதன்முதலில் இந்த தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம்செய்துள்ளது .






கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சல்மோனெல்லா டைபி பாக்டீரியா எனப்படும் சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சல் பரவியது. சிந்து மாகாணத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 20 சதவீதம் அதிகரித்தது.







உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்



இதையடுத்து சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சலுக்காக "தி டைபாய்ட் கான்ஜுகேட் வாக்ஸின்"(டிசிவி) தடுப்பூசியை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி அறிமுக நிகழ்ச்சி கராச்சி நகரில் நேற்று நடந்தது.இதில் பிரதமர் இம்ரான் கானின் சுகாதாரத்துறை தனிப்பட்ட உதவியாளருமான ஜாபர் மிர்சா, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ரா பாஸல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜாபர் மிர்சா கூறுகையில், ஆரம்பத்தில், டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசியை சிந்து மாநிலத்திலும், அதன்பின் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு போடுவதற்கு விரிவுபடுத்த உள்ளோம்.
கடந்த 2017-ம் ஆண்டில் 63 சதவீத டைபாய்டு நோயாளிகளில் 70 சதவீதம் இறந்தவர்களில் 15 வயதுக்கு கீழ்பட்டவர்கள்தான் அதிகம். குழந்தைகளின் மரணத்தைத் தடுக்க இந்த டிசிவி தடுப்பூசி மிகவும் உதவும் என்று நம்புகிறோம்.டிசிவி தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதுக்குட்டவர்கள் வரை ஆண்டுக்கு ஒருமுறை போடும் தடுப்பூசியாகும். விலையும் குறைந்ததுதான். உலகளவில் 11மில்லியன் பேர் டைபாய்டால் பாதிக்கப்பட்டவர்களில், 1,16,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூடுவாஞ்சேரி கோகிலா சுடலைக்கு‌ ஒரு நாலு ஊசி போட்டு விடுங்க
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
16-நவ-201923:06:42 IST Report Abuse
HSR இங்க என்னமோ பாக்கி இத கண்டுபிடிச்சு கிழித்தான் என்று நினைக்கவேண்டாம்.அப்படி இருந்தால் பாராட்டும் முதல் நபராக வந்திருப்பேன்...வாக்சின் ஜெனிவா நாட்டில் GAVI வாக்ஸின் நிறுவனத்தால் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் இணைத்து உலக ஏழை நாடுகளுக்கான தயாரிப்பு இது. நம்ம நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு கிடைக்கிறது..என்னமோ எதிர்ப்பு ஊசி இவனுங்க கண்டு பிடிச்சாபோல செய்தி உள்ளதால் இதை பகிர்ந்து கொண்டேன்..என்னமோ இப்பவாவது குழந்தைகள் மேல் பாசம் வந்ததே..இன்னொன்னு யோசிக்கணும் ..இந்த குழைந்தங்கதனே நாளைய தீவிரவாதிகள். அதுக்காக இதை வாங்கிருப்பானுங்க.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-நவ-201922:51:11 IST Report Abuse
Vena Suna Typhoid உணவு வழியாக salmonella typhi மூலம் வயிற்றுக்குள் சென்று infection ஏற்படுகின்றது .கண்ட இடங்களில் சுத்தம் இல்லாத உணவுகளை சாப்பிடக் கூடாது. ஈக்கள் உணவில் கிருமியை பரப்புகிறது.Typhoid வந்து விட்டால் மாத்திரைகள்,பத்தியமான உணவு ரொம்ப அவசியம். இல்லையேல் உயிருக்கே ஆபத்து.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201901:41:13 IST Report Abuse
தமிழ்வேல் சால்மோனெல்லா இயற்கையாகவே உணவுகளில் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கும். அதை சரியாக பாதுகாக்காத போது, அதில் சால்மோனெல்லா பெருகிவிடும். உதாரணமாய், ப்ரிட்ஜில் வைக்கவேண்டிய பொருட்கள். ஐஸில் வைத்த பொருட்களை வெளியில் எடுத்து வைத்து.... ஐஸ் ஆறியபின் அதை திரும்பவும் ஐஸில் வைத்து உண்ணக்கூடாது. எடுத்து வைத்திருந்த நேரத்தில் அதில் இருந்த சால்மோனெல்லா பெருகிவிடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X