அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சீட்'டுடன் நோட்டும் தாங்க! தே.மு.தி.க.,வினர் நிபந்தனை

Added : நவ 16, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 'சீட்'டுடன் நோட்டும் தாங்க!  தே.மு.தி.க.,வினர் நிபந்தனை

'உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, செலவிற்கு கணிசமான பணத்தை வழங்க வேண்டும்' என, கட்சி தலைமைக்கு, தே.மு.தி.க., நிர்வாகிகள் திடீர் நிபந்தனை விதித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. ஒதுக்கப்பட்ட, நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. முடிவுதேர்தல் செலவிற்கு பணமில்லாததால், கூட்டணி கட்சிகளின் அதிருப்திக்கு, தே.மு.தி.க., வேட்பாளர்கள் ஆளாகினர். கட்சி தலைமை, தேர்தல் செலவிற்கு பணம் தரும் என நம்பி, அவர்கள் கடைசி வரை காத்திருந்து ஏமாந்தனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியை தொடர்வதற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். இரண்டு மாநகராட்சிகள் உட்பட, 20 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என, அ.தி.மு.க.,விடம் கேட்கப் பட்டுள்ளது.

ஒதுக்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்துவதற்காக, தன் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரை, விஜய காந்த் நியமித்துள்ளார். விருப்ப மனுக்கள் பெறும் நடவடிக்கைகளும், மாவட்ட அலுவலகங்களில் நடந்து வருகின்றன. விருப்ப மனுக்களை பெற வரும் தே.மு.தி.க.,வினர், தேர்தலில் போட்டியிட, 'சீட்' மட்டுமின்றி, செலவிற்கு கணிசமான பணத்தையும், கட்சி தலைமை வழங்க வேண்டும் என, கூற துவங்கியுள்ளனர். இதை, மாவட்ட செயலர்கள், விஜயகாந்த் மற்றும் பிரேமலதா கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது, தே.மு.தி.க., தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தொடர் தோல்வியால் எவ்வித வருமானமும் இன்றி, தே.மு.தி.க., நிர்வாகிகள் உள்ளனர். நெருக்கடிபல மாவட்ட செயலர்கள், எம்.பி., தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கடன் நெருக்கடியில் உள்ளனர். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், கணிசமான பணத்தை செலவிட வேண்டும். தற்போதைய சூழலில், வேட்பாளர்களால் மட்டும், அது சாத்தியமில்லை. இதுவரை, கட்சிக்காக செலவழித்தவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க, கட்சி தலைமையும் உதவ வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், இதுவரை பெற்ற தோல்விகளுக்கு, மருந்து போட்டு விடலாம். கட்சியின் பொருளாளராக பிரேமலதா இருப்பதால், தேர்தல் செலவிற்கு பணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
17-நவ-201916:15:09 IST Report Abuse
s.rajagopalan பணம் கேட்கிறார்கள் ...எதற்காக கொடுப்பார்கள் ? பதவி கிடைத்தால் போட்டதை எடுத்து மேக்கிலும் எடுக்கலாம் என்றுதானே ? அப்போ விஜய் காந்தும் அவரின் பேராசை பிடித்த மனைவியும், அவருக்கு ஒத்து ஊதும் மச்சானும் 'நாங்கள் லஞ்ச லாவண்யம் இல்லாத தூய்மையான ஆட்சி கொடுப்போம் " என்பதெல்லாம் தில்லலைங்கடா வாக்குறுதிகள்தானே ? டெபாசிட் போகணும் ...'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ..."
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
17-நவ-201912:41:30 IST Report Abuse
தமிழ்வேள் பிரேமலதா இன்னொரு சசிகலா ...இந்த வி .காந்து கட்சி வராமலிருப்பது மிக உத்தமம் இவர்களது காசு வெறிக்கு எவனாலும் ஈடுகொடுக்க இயலாது இந்த காந்த் ஐ அடுத்த திருமலை நாயக்கர் லெவலுக்கு பில்ட் அப் கொடுப்பார்கள் தாங்க முடியாது சாமி
Rate this:
Share this comment
Cancel
Raj Laser - Chennai,இந்தியா
17-நவ-201909:13:41 IST Report Abuse
Raj Laser அடே தப்பி தவறி ஒரு சீட் ஜெயிகிட்டனுக, சுதீசும், ப்ரேமலதாவுவம் சேர்ந்து தமிழ்நாட்டை எப்படி விக்கலாம் என்று பிளான் பண்ணுவாங்க .. விட்ட காசு எல்லாத்தையும் எடுக்கணும் இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X