தலைவர் முதல் முதல்வர் வரை...: விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைவர் முதல் முதல்வர் வரை...: விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்!

Updated : நவ 17, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (31)
 தலைவர்,முதல்வர், ரஜினி, அரசியல் பயணம்!

'ரஜினி, ஒரு நடிகர்; அரசியல் கட்சி தலைவரல்ல' என, முதல்வர் இ.பி.எஸ்., கடுமையாக விமர்சித்து உள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்க, 'தலைவர் டூ முதல்வர்' என்ற அரசியல் வியூகம் அமைத்து, ஓராண்டு பயணிக்க போவதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம், ரஜினி தெரிவித்த தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில், நடிகர் ரஜினியிடம், 'முதல்வர் இ.பி.எஸ்., - ஸ்டாலின் வருகைக்கு பின், அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா' என, நிருபர்கள் கேட்டனர்.அதிருப்தி அதற்கு, ரஜினி, 'தமிழகத்தில் ஆளுமை நிறைந்த தலைமைக்கு, இன்னும் வெற்றிடம் இருக்கிறது' என்றார். அவரது பேச்சு, அரசியல் வட்டாரங்களில், அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ரஜினியின் பதில் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடும் கோபமாக, 'ரஜினி, ஒரு நடிகர். அவர் கட்சி ஆரம்பிச்சிட்டாரா என்ன; கட்சி தலைவர்; அவர் அரசியல் தலைவர் என, யாராவது சொல்லியிருக்கின்றனரா; பின், ஏன் அவரைப் பற்றி பேச வேண்டும்' என்றார்.

இதுவரை, ரஜினியை பெரிய அளவில் விமர்சிக்காமல் இருந்த, முதல்வர் இ.பி.எஸ்., சமீப காலமாக, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், முதல்வர் மீது, ரஜினி மட்டுமல்லாமல், அவரது மக்கள் மன்றத்தினரும், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், ரஜினியை சந்தித்தார்.அவர்கள் சந்திப்பில், 'தலைவர் முதல் முதல்வர் வரை' என்ற, அரசியல் பயண வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:'காவிக்கு நான் மாற மாட்டேன்' என, ரஜினி அளித்த பேட்டியை, அ.தி.மு.க., தவறாக புரிந்துள்ளது.

பா.ஜ., கூட்டணியில், இனி ரஜினி இல்லை என்பதை, பா.ஜ., மேலிடத்திற்கு சுட்டிக்காட்டுவதற்காக தான், ரஜினியை, முதல்வர் இ.பி.எஸ்., விமர்சித்து வருகிறார்.தனித்து போட்டிஇரு திராவிட கட்சிகளும், ஊழலில் திளைத்த கட்சிகள் என்பதால், அக்கட்சிகளுக்கு மாற்று கட்சியாக, தன் கட்சியை உருவாக்க, ரஜினி விரும்புகிறார். ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை, இ.பி.எஸ்., நிரப்பியிருக்கலாம். அதேபோல், கருணாநிதி மறைந்த பின், அவரது வெற்றிடத்தை, ஸ்டாலின் நிரப்பியிருக்கலாம். ஆனால், மக்கள் மனதில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும் ஈர்ப்பு சக்தி, ரஜினிக்கு மட்டும் தான் உண்டு என்பதை, அவர் விரைவில் நிரூபிப்பார். வயதான நடிகர் என, அ.தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர்.

இந்தியாவில், அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி. அவரது கால்ஷீட்டிற்காக, பல தயாரிப்பாளர்கள் காத்து இருக்கின்றனர். கமல், 4 சதவீதம், சீமான், 4 சதவீதம், விஜயகாந்த், 8 சதவீதம் என, ஒற்றை இலக்கத்தில், ஓட்டு சதவீதம் வாங்கியது போல, ரஜினிக்கும் ஒற்றை இலக்கம் கிடைக்கும் என, அ.தி.மு.க., மேலிடம் கருதுகிறது. அது, ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை, ரஜினி கட்சி துவக்கிய பின் தெரியவரும்.

சட்டசபை பொது தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என, ரஜினி அறிவித்தார். அவரை போல, முதல்வர் இ.பி.எஸ்.,சும், ஸ்டாலினும் தனித்து போட்டி என, அறிவிக்க தைரியம் இருக்கிறதா? 'தலைவர் டூ முதல்வர்' என்ற பயணத் திட்டத்தை வகுத்து, ஓராண்டு முழுவதும் பயணிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X