பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம்: அவசர சட்டம் பிறப்பிப்பு

Added : நவ 16, 2019
Advertisement
 வாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம்: அவசர சட்டம் பிறப்பிப்பு


தமிழ்நாடு வாடகை வீட்டு வசதி சட்டப்படி, வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை, ஓராண்டுக்கு நீட்டித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில், வாடகை வீட்டு வசதி சட்டம் எனப்படும், நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் பொறுப்புகள், உரிமைகள் சட்டம், 2017ல் நிறைவேற்றப் பட்டது. இதற்கான விதிமுறைகள், 2019 பிப்., 22ல் அமலுக்கு வந்தன.இந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து, 90 நாட்களுக்குள், வீடு மற்றும் நிலத்தை வாடகைக்கு விடுவோரும், பெறுவோரும் சட்ட ரீதியான, ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். நிர்வாக நடைமுறைகள் காரணமாக, இதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.எனவே, ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அவகாசத்தை, 210 நாட்களாக நீட்டித்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, இந்த அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து, அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.

அதனால், இச்சட்டத்தின் நான்காவது பிரிவின், உட்பிரிவு இரண்டில், வாடகை ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான அவகாசம், 210 நாட்கள் என்பது, 575 நாட்களாக திருத்தப் பட்டுள்ளது. இந்த திருத்தத்துக்கான அவசர சட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து உள்ளார். இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வாடகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ள கூடுதலாக, 365 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X