பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டணிகளுக்கு மேயர் பதவி கிடையாது: அ.தி.மு.க., - திமுக ஒருமித்த முடிவு

Updated : நவ 18, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement
கூட்டணி,மேயர் பதவி, அ.தி.மு.க., தி.மு.க., எதிர்பார்ப்பு, கட்சி,வேட்டு

உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, மாநகராட்சி மேயர் பதவிகளை தருவதில்லை என்றும், மற்றபதவிகளில் மட்டும் ஒதுக்கீடு அளிக்கவும், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இரு பிரதான கட்சிகளின் இந்த முடிவால், எப்படியும் ஒன்றிரண்டு மேயர் பதவிகளை பெறலாம் என்ற கனவில் இருந்த, கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சி சார்பில், 90 சதவீத இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தி.மு.க., சார்பில், 80 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும் என, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


15 மாநகராட்சிகள்



அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறும் பணிகள் துவங்கி உள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகள் உட்பட, 15 மாநகராட்சிகளிலும், மேயர் பதவி களில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சு, இன்னும் இக்கட்சிகளில் துவங்கவில்லை.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின், இட ஒதுக்கீடு பேச்சு நடைபெறும். ஆனாலும், திரைமறைவில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சிலர், இடஒதுக்கீடு சதவீதம் தொடர்பாக பேச்சு நடத்தி வருகின்றனர்.அதில், கூட்டணி கட்சி களுக்கு, மாநகராட்சி மேயர், மிகப் பெரியநகராட்சி தலைவர் பதவி களை தவிர, மற்ற பதவி களில் மட்டும், இடஒதுக்கீடு அளிக்கலாம் என, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அக்கட்சிகளின் வட்டாரங்கள்கூறியதாவது:அ.தி.மு.க., அணியில், பா.ஜ., இடம்பெறுமா அல்லது தனித்து போட்டி யிடுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.லோக்சபா தொகுதிகள்ஒதுக்கீடு விகிதாச்சார அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, ஆளுங்கட்சி முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது, லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு கணக்கிலிருந்து, 25 சதவீதம் குறைத்து ஒதுக்கீடு செய்ய, அ.தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. அந்த வகையில், பா.ம.க.,வுக்கு, 12 சதவீதம், தே.மு.தி.க.,வுக்கு, 8 சதவீத இடஒதுக்கீடு தான் அளிக்க வாய்ப்பு உள்ளது.


எதிர்பார்க்காதீர்கள்



அதேபோல், தி.மு.க.,வில், காங்கிரஸ் கட்சிக்கு, 25 சதவீதம் ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிகிறது. ஆனால், மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மட்டும் தான் இடஒதுக்கீடு. மாநகராட்சி மேயர், பெரிய நகராட்சி தலைவர் பதவிகளை, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், அக்கட்சியால், ஆளுங்கட்சிக்கு இணையாக தேர்தலை சந்திக்க முடியுமா என்ற சந்தேகம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுஉள்ளது.

சமீபத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர், ஸ்டாலினை சந்தித்து, இடஒதுக்கீடு தொடர்பாக பேசியுள்ளனர்.அப்போது, 'மாநகராட்சி மேயர் பதவியை எதிர்பார்க்காதீர்கள்' என, ஸ்டாலின் கறாராக கூறியுள்ளார். அதேபோல், ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும், மேயர் பதவிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.இவ்வாறு, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.


'மாஜி'க்கள் மல்லுக்கட்டு!@


@

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் பதவிக்கு, நேரடி தேர்தல் நடக்க உள்ளது. ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மறைமுக தேர்தல் வழியே தேர்வு செய்யப்படுவர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம், 1.50 லட்சம் பதவிகளுக்கு, தேர்தல் நடத்தப்பட உள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், தாங்கள் போட்டியிட, அதிக இடங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில், பதவிகளை பெற கடும் போட்டி இருப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணி இழுபறி குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க.,விலும், தி.மு.க.,விலும், 'சீட்' பெற, பலர் முட்டி மோதுகின்றனர்.அ.தி.மு.க.,வில், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளைப் பெற, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரும் களத்தில் குதித்துள்ளனர்.

அதேபோல், மற்ற பதவிகளுக்கும், கடும் போட்டி நிலவுகிறது. மாவட்ட செயலர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளதால், அவர்களை சுற்றி வரும் கூட்டம் அதிகரித்துள்ளது.மாவட்ட செயலர்களுக்கு எதிரான கோஷ்டியினர், மாநில நிர்வாகிகளை பிடித்து, 'சீட்' பெற முயற்சித்து வருகின்றனர். யாருக்கு சீட் வழங்கினாலும், கோஷ்டி பூசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவரையும் சமாதானப்படுத்தி, வெற்றி வாய்ப்புள்ளவர் களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக, ஆலோசனை கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், தி.மு.க.,விலும், உள்ளாட்சி பதவிகளுக்கு, 'சீட்' பெற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு மாவட்ட செயலர்களை பிடித்தால் மட்டுமே, சீட் கிடைக்க வாய்ப்பு என்பதால், அவர்களையே கட்சியினர் சுற்றி வருகின்றனர்.கட்சி நிர்வாகிகளும், உள்ளாட்சி பதவிகளில் இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில், எப்படியும், சீட் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன், அனைத்து யுக்திகளையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.இதே நிலை, மற்ற கட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. கூட்டணி பேச்சு துவங்கிய பின், இரு கூட்டணியிலும், சீட் ஒதுக்கீடு உட்பட, பலசிக்கல்கள் ஏற்படலாம் என தெரிகிறது.
-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
18-நவ-201918:46:30 IST Report Abuse
Harinathan Krishnanandam ஒரே கட்சிக்கு 15 மேயர் பதவிகளை ஜீரணிக்க முடியுமா
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
17-நவ-201922:16:08 IST Report Abuse
Viswanathan "கூட்டணிகளுக்கு மேயர் பதவி கிடையாது: அ.தி.மு.க., - திமுக ஒருமித்த முடிவு" தமிழகத்தை கொள்ளை அடிக்கும் மொத்த உரிமமும் எங்களுடையதே
Rate this:
Share this comment
Cancel
gk -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201920:27:36 IST Report Abuse
gk பிறகு ஏன் இந்த கூட்டணி..தனி தனியே போட்டியிடலாமே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X