பொது செய்தி

இந்தியா

'ஒரே நாடு; ஒரே தேர்தல் நிறைவேற வாய்ப்பில்லை'

Updated : நவ 18, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (17)
Advertisement
ஒரே நாடு; ஒரே தேர்தல், சுனில் அரோரா , வாய்ப்பில்லை, சட்டசபை,

ஆமதாபாத்:''அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத வரையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம்' நிறைவேற வாய்ப்பில்லை,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதா பாதில் உள்ள நிர்மா பல்கலையில் நடந்த நிகழ்ச்சி யில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசியதாவது:நாட்டில், 1967ம் ஆண்டு வரை, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின், பல்வேறு காரணங்களால், சில சட்டசபைகள் கலைக்கப்பட்டன.

மேலும், 1971ல், லோக்சபா தேர்தல், முன் கூட்டியே நடத்தப்பட்டது. இதனால், லோக்சபா, சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, முடியாமல் போனது. இப்போது, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கோஷத்தை, மத்திய அரசு முன்வைத்துள்ளது. ஆனால், இது தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்துஏற்படாதவரை, இது நிறைவேற வாய்ப்பில்லை. மின்னணு ஓட்டு இயந்திரங்களில் முறைகேடு செய்வது என்பது நடக்காத காரியம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gk -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201920:25:49 IST Report Abuse
gk வாய்ப்பில்லை என்று சொல்ல ஒரு அதிகாரி ஏன்..செயல் வீரர்கள் வரட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
17-நவ-201917:51:40 IST Report Abuse
Girija ஏன் இல்லை ? புரிகிறமாதிரி சொல்கிறேன், நாடு முழுவதும் ஏ டீ எம் எப்படி இயங்குகிறது ? அதுபோல் தேர்தல் பூத்தில் பயன்படுத்தப்படும் கணினிகளை ஒன்றாக இணைத்து நடத்த என்ன கஷ்டம்? கூடுதல் பணியாளர்கள் மற்றும் கணினிகள் தேவைப்படும், மென்பொருள் மேம்படுத்தவேண்டும் .
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
17-நவ-201919:01:44 IST Report Abuse
Rajasஒரே தேர்தல் மத்தியிலும், எல்லா மாநிலங்களிலும் நடத்தி முடித்ததும், ஒரு மாநில அரசு ஏதோ காரணங்களால் ஒரு வருடத்தில் கவிழ்ந்து விட்டது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வரவில்லை. அப்படியானால் என்ன செய்வது....
Rate this:
Share this comment
Cancel
17-நவ-201917:13:09 IST Report Abuse
kulandhai Kannan இது ஒரு பித்தலாட்ட கோஷம். இதை ஆரம்பித்து வைத்த பாஜக, மராட்டிய தேர்தலை லோக்சபாவோடு நடத்தியிருந்தால், ஸ்வீப் செய்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X