எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரூ.3,400 கோடியில் நவீன மின்நிலையம் முதல் முறையாக தமிழகத்தி்ல் தயாரானது

Updated : நவ 17, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
ரூ.3,400 கோடி, நவீன மின்நிலையம்,முதல் முறை,தமிழகத்தி்ல் தயாரானது

தென் மாநிலங்களில், முதல் முறையாக, தமிழகத்தில், 3,400 கோடி ரூபாய் செலவில், 800 கிலோ வோல்ட் திறனில் அமைக்கப்பட்டு வரும், அதிநவீன துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.
மத்திய அரசின், 'பவர்கிரிட் கார்ப்பரேஷன்' நிறுவனம், பிற மாநிலங்களில் இருந்து, மின் வழித்தடங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள, அதன், 765, 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் எடுத்து வருகிறது. அங்கிருந்து, அவற்றின் அருகில் உள்ள, தமிழக மின் வாரியத்தின், 400 கி.வோ., துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறப்பட்டு, மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.


துணை மின் நிலையம்


தற்போது, விழுப்புரம் மாவட்டம், அரியலுார் மற்றும் வட சென்னையில், 765 கி.வோ., திறனில், தமிழக மின் வாரியம் சார்பில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்கு, 6,000 மெகா வாட் மின்சாரம் பெறப்பட உள்ளது. இதற்காக, சத்தீஸ்கர் - ராய்கர் மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில், தலா, 800 கி.வோ., வாட் திறனில், பவர் கிரிட் நிறுவனம், அதிநவீன துணை மின் நிலையம் அமைத்து வருகிறது. அவற்றை இணைக்கும் வகையில், அதே திறனில், 1,765 கி.மீ., துாரத்திற்கு, மின் கோபுர வழித்தடம் அமைக்கப்படுகிறது.


சோதனை முறைஇந்நிலையில், தற்போது காங்கேயம் அருகில் அமைக்கப்பட்டு வரும் நவீன துணை மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்து, அவற்றில் உள்ள மின் சாதனங்களை, சோதனை முறையில் இயக்கும் பணி துவங்கியுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பவர் கிரிட் நிறுவனம், 3,400 கோடி ரூபாய் செலவில், காங்கேயம் அருகில், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை, இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இதுவே, தென் மாநிலங்களில், அதிக திறனில் உடையது.

ராய்கர், காங்கேயம் இடையில் வழித்தட பணியும், 90 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில், அந்த வழித்தடம், ராய்கர், காங்கேயம் அருகில் உள்ள, 800 கி.வோ., துணை மின் நிலையங்களில் இணைக்கப்படும். இதனால், சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்திற்கும்; தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், அதிக மின்சாரம் எடுத்துச் செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
17-நவ-201916:53:06 IST Report Abuse
 N.Purushothaman என்னது ? காங்கிரஸ் ஆட்சியில தொண்ணூறு சதவிகிதம் முடிஞ்ச திட்டமா ? செம காமடி ...ஓக்கே ..ஓக்கே ..
Rate this:
Cancel
17-நவ-201916:03:32 IST Report Abuse
எழிலன் அனல் மின்நிலையமாக இல்லாதபட்சத்தில் இது ஒரு நல்ல செய்திதான். அனல் மின்நிலையமாகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறைப்புநோக்கிய மோடி அவர்களின் முனைப்புகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும்.
Rate this:
Cancel
Soundar - Chennai,இந்தியா
17-நவ-201910:18:47 IST Report Abuse
Soundar This would not have happened but for our Prime Minister Modiji's visionary leadership, foresightedness and sincere interest in the development and welfare of our country and ordinary citizens. Pray that Lotus wil blossom and Tamil Nadu will have a BJP Chief Minister in 2020.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-நவ-201911:55:51 IST Report Abuse
pradeesh parthasarathyஇது ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் தொண்ணூறு சதவிகிதம் முடிந்த திட்டம் ... இத்திட்டம் எப்பொழுது துவங்கியது ,,அது எத்தனை சதவிகிதம் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவடைந்திருந்தது என்பதை பழைய பத்திரிகைகளை புரட்டி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ... இது காங்கிரஸ் அரசின் சாதனை ......
Rate this:
G.Kirubakaran - Doha,கத்தார்
17-நவ-201915:43:39 IST Report Abuse
G.Kirubakaranஇடை பற்றி உங்களுக்கு தெரிந்ததால் , மிக அழகாக எழுதி உள்ளீர்கள் . சாதாரண மக்களுக்கு என்ன தெரியும். நீட்,தலித்,இந்துயிசம் மட்டும் பேசி , மக்களிடையே கருது வேற்றுமை பரப்பி வரும் காட்சிகளை -மக்கள் எப்பொதுழுது தான் - ஒடுக்குவாரோ...
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-நவ-201914:07:44 IST Report Abuse
THENNAVANகாங்கிரசு தன் கைக்காசு போட்டு செயல்படுத்தும் திட்டம் என நீங்க சொன்னாலும் நாங்க நம்பித்தான் ஆகணுமா பார்த்த சாரதி. உங்கள் விளக்கம் சரியானதா எல்லாம் மக்கள் காசு காங்கிரசு கொள்ளை அடித்தது போக மீதில் இருந்த காசில் நிறைவேற்றிய திட்டம் என சொல்லுங்கள் அதுதான் சரி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X