தமிழ்நாடு

கந்துவட்டி கும்பலிடம் சிக்கும் பெண்களின் பாதை மாறும் பந்தம்! பணத்தை செலுத்த முடியாமல் சிக்கும் அவலம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 கந்துவட்டி கும்பலிடம் சிக்கும் பெண்களின் பாதை மாறும் பந்தம்! பணத்தை செலுத்த முடியாமல் சிக்கும் அவலம்

கோவை:கோவையில், கந்துவட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களிடம் சிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்க்கை தடம் மாறி வருகிறது. அதனால், குடும்ப பந்தம் சிதறுவதாக, மகளிர் போலீசார் எச்சரிக்கின்றனர்.கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மகளிர் குழுக்களில், 10 பெண்களை ஒருங்கிணைத்து, தலா, 20 ஆயிரம் ரூபாய், தனியார் நிதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன.
இத்தொகையை, 52 வாரத்துக்கு அசலும், வட்டியுமாக சேர்த்து வாரம், 625 ரூபாய் செலுத்த வைக்கின்றன.குழுவில் இடம்பெற்ற பெண்களில் யாராவது ஒருவர் பணம் செலுத்த தவறினாலும், மற்றவர்கள் ஒன்றிணைத்து, அத்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். பணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்தி விட்டால், மீண்டும், அதே நடைமுறையில், 40 ஆயிரம் அல்லது, 50 ஆயிரம் ரூபாய் தருகின்றனர்.
குடும்ப சூழல் காரணமாக, இத்தொகையை பெண்கள் பெற்று விடுகின்றனர். இத்தொகையை அசலும், வட்டியுமாக திருப்பிச் செலுத்த இரண்டு ஆண்டுகளாகும். ஒரு நாளைக்கு, 150-200 ரூபாய்க்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், வாரம், 625 ரூபாய் வரை கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளது.கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர் ஓரளவு சமாளிக்கின்றனர். கணவனை இழந்த, 'குடிகார' கணவனிடம் சிக்கிய பெண்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. குழந்தைகளை வளர்த்து, வாரந்தோறும் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.இந்த கடனுக்கு பணம் செலுத்த, அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கும் சூழல் சிலருக்கு ஏற்படுகிறது.
ஏற்கனவே வாங்கிய கடனுடன் புதிதாக ஒரு கடன் சேர்கிறது. பணம் செலுத்த முடியாமல் போனால், குழுவில் உள்ள மற்ற பெண்களே, அப்பெண் வீட்டுக்கு சென்று, தகாத முறையில் திட்டும் சம்பவங்களும் நடக்கின்றன. இதன் காரணமாக விபரீத முடிவுக்கு தள்ளப்படும் பெண்கள், குடும்ப நிலையை மறந்து தடம் மாறும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னை தற்போது அதிகமாக வருவதாக மகளிர் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அனைத்து மகளிர் போலீசார் கூறியதாவது:கோவை மாநகரில் கிழக்கு, மேற்கு, மத்திய பகுதி என, மூன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சமீபகாலமாக நிதி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த முடியாமல், விபரீத முடிவு எடுக்கும் பெண்களின் நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.வசூல் மீட்டிங்கிற்கு வரும் நபர்களிடம் மொபைல்போன் எண்களை கொடுக்கும் பெண்கள், அதன்பின் அவர்களுடன் பழகுகின்றனர்.
நாளடைவில் இவர்களின் இயலாமையை அறிந்து, தவறான வழிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சிலர் தற்கொலை முடிவுகளையும் எடுக்கின்றனர். இதனால், கணவன்-குழந்தைகள் என்ற குடும்ப உறவு சிதறுகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும் பெண்களுக்கு, கணவருடன் சேர்த்து 'கவுன்சிலிங்' அளித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பணம் செலுத்த முடியாமல் போனால், குழுவில் உள்ள மற்ற பெண்களே, அப்பெண் வீட்டுக்கு சென்று, தகாத முறையில் திட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. இதன் காரணமாக, விபரீத முடிவுக்கு தள்ளப்படும் பெண்கள், குடும்ப நிலையை மறந்து தடம் மாறும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னை, தற்போது அதிகமாக வருவதாக மகளிர் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-நவ-201919:32:10 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அரசு அல்லது அரசு சார்ந்த / ரிசெர்வ் பேங்க் அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களை தவிர தனியார் வட்டி தொழில் செய்ய கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். ஒருவரின் இயலாமையை வைத்து வியாபாரம் செய்பவர்களை சிறையில் அடைக்க வெகுண்டு. பொள்ளாச்சி சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
23-நவ-201917:19:43 IST Report Abuse
ashak இஸ்லாமிய சட்டம் மட்டுமே மனிதர்களுக்கு சிறந்தது, வட்டியை இஸ்லாம் எதிர்க்கிறது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
24-நவ-201911:22:15 IST Report Abuse
Nallavan Nallavanமற்ற மதங்கள் ஆதரிக்கின்றன என்றா எடுத்துக்கொள்வது?? அது சரி... ஷரியத் சட்டம் ஜனநாயக நாட்டில் செல்லுபடியாவதில்லையே... ஏன் ?? இஸ்லாமிய நாடுகளிலேயே கூட ஷரியத் அகன்று வருகிறதே?? ஏனென்று யோசித்ததுண்டா ??...
Rate this:
Share this comment
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
23-நவ-201917:05:10 IST Report Abuse
amicos கொடுப்பது 20 ஆயிரம் ஆனால் வட்டி 12500 அநியாயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X