இலங்கை தேர்தல் முடிவு; கோத்தபயா ராஜபக்சே கட்சி முன்னிலை

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (14)
Advertisement

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கோத்தபய ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி முன்னிலை வகிக்கிறது.
யின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச, கோத்தபய ராஜபக்சே மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் இலங்கை அரசியல் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.






அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில், 35 பேர் போட்டியிட்டாலும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே, 70, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசா, 52, ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது.

இந்த தேர்தலில், 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 845 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளுக்கு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு படையினர், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டளிக்க விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்தது.





சஜித் பிரேமதாசா, அம்பந்தோட்டையிலும், கோத்தபயா, கொழும்பு விலும், தங்கள் ஓட்டுகளை செலுத்தினர். விறு விறுப்பாக நடந்த ஓட்டுப் பதிவு, மாலை, 5:00 மணிக்கு முடிவடைந்தது. தேர்தலில், 81 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஓட்டு எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி,







முன்னிலை நிலவரம்

இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 49.41 சவீதம் ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 44.41 சதவீதம் ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் பகுதியில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதே போன்று சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சே அதிக ஓட்டுக்கள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட சுமார் 1.5 லட்சம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வருகிறார். பொதுஜன கட்சியின் வெற்றியை கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ள தொகுதிகள்
யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்லை, காலி, மற்றும் வன்னி

கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ள தொகுதிகள்
மொனராகலை, கம்பகா, ரத்தினகிரி, மாத்தளை, கொழும்பு, நுவரெலியா, பதுள்ளை, களுத்துறை, பொலன்னறுவை, மற்றும் அப்பாந்தோட்டை .

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201910:20:07 IST Report Abuse
Yaro Oruvan ஆக, வாணியம்பாடி பழனிச்சாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்... என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்..
Rate this:
Share this comment
Cancel
Kumar Iyer - Chennai,இந்தியா
17-நவ-201910:01:01 IST Report Abuse
Kumar Iyer சற்றுமுன் இலங்கையிலிருந்து எனது இலங்கை தமிழ் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தாற்போது இலங்கையில் நாடாகும் பொது தேர்வுவில் திரு கோத்தபாய ராஜபக்ஷே ( நண்பர் இவரது பெயரை இங்கு பதிவிடமுடியாதபடி உச்சரித்தார்.) வெற்றி பெறுவதட்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றார். தமிழர் கூட்டமைப்பு சஜித் பேமதாசாவை ஆதரிக்கும் நிலையில் அவருக்கு மேலே கூறபட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது என்றார். இதில் இந்தியஅரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினார். முடிவு எதுவாகினும் வரும் காலங்களில் அமையவிருக்கும் அரசு இலங்கை தமிழ் சகோதர்களுக்கு நம்மையே செய்யும் என்று நம்புவோம்,
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-நவ-201909:53:27 IST Report Abuse
Natarajan Ramanathan கெட்ட பய சார் இந்த கோத்தபய ராஜபக்சே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X