சபரிமலை கோவில் ; பெண்களுக்கு அனுமதி மறுப்பு

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
திருவனந்தபுரம் : சபரிமலையில் பெண்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவேஅனுமதி வழங்கியதை தொடர்ந்து, சபரிமலைக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ரஞ்சன் கோகாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து 7 நீதிபதிகள் கொண்ட

திருவனந்தபுரம் : சபரிமலையில் பெண்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவேஅனுமதி வழங்கியதை தொடர்ந்து, சபரிமலைக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.latest tamil news
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ரஞ்சன் கோகாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி அமைத்தது. இதனையடுத்து பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்ற சுப்ரீம்கோர்டின் பழைய உத்தரவே தொடர்ந்தது. இந்நிலையில் இதனை ஏற்க மறுத்த கேரள அரசு, பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் அவர்களுக்கு தனியாக பாதுகாப்பு தர இயலாது என கூறி மறுத்தது.

முதல் நாளில் சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க, ஆந்திராவில் இருந்து 18 பேர் கொண்ட குழு, வழியில் போலீஸ் அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர். அதில் பெண்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பெண்களை திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் நுழைந்தால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பத்மா என்ற அந்த பெண் கூறுகையில், இத்தகைய விதியை நான் எதிர்பார்க்கவில்லை. பெண்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் நீக்கியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதை நான் போலீஸ் அதிகாரிகளிடம் சொன்னபோது, ​​அவர்களிடம் பதில் இல்லை. சிலருக்கு வயது ஒரு காரணமாக இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போடு போய்விட்டன என்று நான் நினைத்தேன். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் எங்களைத் தடுக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு கூறினார்.


latest tamil news
தொடர்ந்து தெலுங்கானாவைச் சேர்ந்த 3 பேர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்வதாகவும் சபரிமலையில் உள்ள நடைமுறை மற்றும் பழக்கங்கள் தெரியாது எனவும் கூறினர். சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடையவர்களை தவிர மற்ற பெண்களுக்கு அனுமதியில்லை. இதற்காக பெண் பக்தர்களின் வயதினை அறிய சான்றிதழ் அல்லது ஏதேனும் ஆவணங்கள் காட்டப்பட வேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கேட்டால், எங்கள் மேலதிகாரியின் உத்தரவுபடி நாங்கள் செயல்படுகிறோம் என்று பெண் போலீசார் ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், சுப்ரீம்கோர்ட் தனது 2018 தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு மேலும் பெண்களை அவர்கள் எவ்வாறு தடுக்க முடியும்? என்பது பெண்களின் கேள்வியாக உள்ளது. ஆர்வலரும் பூமாடா படைப்பிரிவின் தலைவருமான திருப்தி தேசாய், கோயிலுக்கு மலையேறும் திட்டத்தை அறிவித்துள்ளார், அரசாங்கத்தின் திருப்பம் குறித்து விமர்சித்தார்.


latest tamil news
“சன்னதியில் வழிபட விரும்பும் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காது என்று மாநில கோயில் விவகார அமைச்சர் எப்படி சொல்ல முடியும்? உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பால், மாநிலம் அதை பின்பற்றி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் பொறுப்பாகும், ”என்று அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் புண்ணாலா ஸ்ரீகுமார் கூறுகையில், "கோவிலில் பெண்கள் வழிபட்டால் அரசாங்கம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காது என்று ஒரு அமைச்சர் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. சுப்ரீம்கோர்ட் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசாங்கம் பின்வாங்கியதாகத் தெரிகிறது, ”என்று கூறினார்.

இதுகுறித்து தேவஸ்வம் வாரிய அமைச்சர் கே.சுரேந்திரன் பேசுகையில், "கோயிலுக்கு வருகை தரும் எந்தவொரு பெண்ணுக்கும் மாநில அரசு பாதுகாப்பு வழங்காது. பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் உச்சநீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற வேண்டும்". பல குழப்பங்களுக்கு மத்தியில் சபரிமலை விவகாரம் குறித்து நவ.,18 ( திங்களன்று) சிபிஐ (எம்) அறிக்கை வெளியிடும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-நவ-201917:04:14 IST Report Abuse
Endrum Indian இப்போ மீடியாவை பார்க்கணுமே பொங்கி பொங்கி விவாத மேடை பல நடத்த இந்த செய்தி போதுமே???
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-நவ-201912:06:26 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த பிரச்சினை அனைத்திற்கும் உச்ச நீதிமன்றமும், மாநில அரசுமே பொறுப்பாவர்.. எப்போது ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றுவதென்று முடிவெடுத்துவிட்டார்களோ, அப்போது தங்களுடைய முந்தைய தீர்வுக்கு இடைக்கால தடை விதிப்பதில் என பிரச்சினை இருக்க முடியும்? எதற்காக போன வருட தீர்ப்பையே நடைமுறையில் வைக்கவேண்டும்? அரசைப் பொறுத்தவரை சென்ற வருடத்தின் மூளையற்ற நடத்தையால், இந்த வருடம் பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறது.... கர்மா (என்ற ஒன்று இருக்குமானால்) ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறது ....
Rate this:
Cancel
17-நவ-201910:41:59 IST Report Abuse
ருத்ரா உல்லாச ஸ்தலம் போல் கோயிலின் விதி முறைகளை மாற்றாதீர்கள். வீராங்கனை விளம்பர யுவதிகள் பெண்கள் வரக்கூடாது என்ற கட்டுப் பாட்டு வேறு மத ஸ்தலங்களில் வேறு நாடுகளில் (அதுவும் தவறுதான்) உள்ளே நுழைய முயற்சிக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X