பொது செய்தி

இந்தியா

தட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement

மொஹாலி: தட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்






பஞ்சாப் மாநிலம் மொஹாலி பல்கலையில் நடந்த தட்பவெப்ப மாறுதல் அதற்கான தீர்வுகள் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கின் துவக்கவிழாவில் மத்திய ரயில்வே, வர்த்தக தொழில்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது, ‛21ம் நூற்றாண்டில் இந்தியா வறுமை, தட்பவெப்ப மாறுதல், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் மற்ற உலக நாடுகளின் மத்தியில் முதலிடம் வகிக்கிறது.

சமூகத்தின் நன்மை கருதி பொருளாதார முன்னேற்றத்தின் போது சுற்றுப்புற சூழ்நிலை பாதிக்கப்பட கூடாது. சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் பொருளாதார முன்னேற்றம் இரண்டிலும் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்பு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கவுதில்யா அர்த்தசாஸ்திரத்தில் சுற்றுப்புறசூழல், காடுகள் மற்றும் விலங்குகள். மற்றும் இயற்கையின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.




நான்கு வருடங்களில் இந்தியாவில் உள்ள ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும். பா.ஜ., ஆட்சியில் தான் 90 சதவீதம் பேருக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.' இவ்வாறு அமைச்சர் பேசினார்

கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சுவாதன்டர் குமார், இக்கருத்தரங்கின் நோக்கம் சுற்றுப்புற சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.Rams -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201910:47:24 IST Report Abuse
c.Rams தின்னுபோட்டு வேற வேலை வேணுமில்ல...!!!
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
17-நவ-201909:34:53 IST Report Abuse
சமத்துவம் இந்தியா தற்போது இரண்டாம் நிலை நகரங்களின் கட்டமைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. மேலும் போக்குவரத்து மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் போர்க்கால அடிப்படையில் கண்ணியத்துடன் கண்டிப்புடன் செயல்பட்டு தவறுகள் எங்கிருந்தாலும் முழு சுதந்திரத்துடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
17-நவ-201906:25:43 IST Report Abuse
sathiya narayanan சீக்கரம் அந்த கம்பெனி அனுமதி கொடுங்க சாமி அப்ப தான நம்ப போராட்டம் பற்றி நம் எஜமான்களுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X