பாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
அயோத்தி : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு'அந்த நிலத்தில் ராமர் கோவில்

இந்த செய்தியை கேட்க

அயோத்தி : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.


தீர்ப்பு


'அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், டிச., 6ல் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முஸ்லிம் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.தற்போது, அந்த நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news





நம்பிக்கை


இது குறித்து, உத்தர பிரதேச அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது:தீர்ப்பு வெளியாவதற்கு முன், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த நடவடிக்கைகள் தொடரும். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த, 144 தடைஉத்தரவு, டிச., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியானபோது, அயோத்தி மக்கள் அமைதி காத்தனர். அது போலவே, பாபர் மசூதி இடிப்பு தினத்தின்போது, மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து, அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மூன்று பேர் கைது


அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகள் பதிவிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீர்ப்பை விமர்சித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக சாதிக் மாலிக் என்பவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
21-நவ-201918:34:04 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் @Blocked User - Blocked,மயோட் - பிறகு ஏன் அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை?
Rate this:
Cancel
AYYA - Chennai,இந்தியா
17-நவ-201916:40:56 IST Report Abuse
AYYA அதான் பிரச்சனை முடிந்து விட்டதே. இன்னும் இந்த ஊடகங்கள் ஆறிய புண்ணை ஏன் சொரிந்து விடுகின்றனர்?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
17-நவ-201916:24:30 IST Report Abuse
Nallavan Nallavan பெரும்பான்மைச் சமூகமே .......நீங்கள் மட்டும் டிசம்பர் ஆறாம் தேதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மத நல்லிணக்கம் பேசிக்கொண்டே இருங்கள் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X