சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூரில் பலத்த மழை: நிலச்சரிவு, வாகனங்கள் சேதம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019
Advertisement
குன்னூர், மேட்டுப்பாளையம், கனமழை, நிலச்சரிவு, போக்குவரத்து, பாதிப்பு, ஊட்டி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வாகனங்கள் சிக்கி கொண்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று(நவ.,16) இரவு கனமழை பெய்தது. பெய்த மழை அளவு 14 செ.மீ., ஆக பதிவானது. இதனால், கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் இருந்த பைக், கார் என 19 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனை, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.





அதே பகுதியில் பள்ளிவாசல் அருகே இருந்த வீடும் சேதமடைந்தது. 16 வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. சேதத்தை பார்வையிட வந்த எம்.எல்.ஏ., சாந்திராமு, மற்றும் அதிகாரிகளை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.






கிருஷ்ணாபுரம் ஆற்றில், தனியார் அமைத்துள்ள சிறு சிறு பாலங்கள் காரணமாக குப்பைகள் சேர்கின்றன. இதனால் பாலத்தை அகற்ற வேண்டும் எனக்கூறினர். உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடன் செய்து தருவோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். மீட்டுபணியில் நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.




குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் 40 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 16 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவில், மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன. மரங்கள் அகற்றும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டனர். 16 மணி நேரத்திற்கு பின்னர், சாலை சரி செய்யப்பட்ட பின்னர், போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X