பொது செய்தி

இந்தியா

பார்லிமென்ட் அருங்காட்சியகமாகிறதா?

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement

டில்லியில், ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள, பார்லிமென்ட் வளாகமும், அதை ஒட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதற்காக, குஜராத் நிறுவனம் ஒன்றுடன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்நிலையில், இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்கக் கூடாது என, எதிர்க்கட்சியினர், தே.ஜ.கூ., அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிக்க மாட்டோம் என, மத்திய அரசும் சொல்லியிருக்கிறது. இது குறித்து, ஒரு சீனியர், பா.ஜ., தலைவரிடம் பேசிய போது, 'ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக், பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் ஆகிய கட்டடங்கள் முற்றிலுமாக மாற்றப்பட உள்ளன. 'இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்காமல், அது, அருங்காட்சியகமாக மாற்றப்படும்.

இங்கு பார்வையிட வரும் மக்கள், இந்திய வரலாற்றை பார்க்கலாம்' என்கிறார் அவர். அதே நேரத்தில், பார்லிமென்டிற்கு, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாம். 'பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலங்கங்கள், நவீன முறையில் கட்டப்பட உள்ளன. 'இதற்காக, ராஷ்டிரபதி பவனுக்கு அருகில், இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும், 2024ல், அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள், புதிய பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்படும்' என்கிறார் அந்த தலைவர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
17-நவ-201920:35:55 IST Report Abuse
JSS மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கவேண்டாம். இன்னொரு புதிய பார்லிமென்ட் கட்டிடம் வேண்டியதில்லை. இருக்கும் கட்டிடமே நன்றாக இருக்கிறது. திமுக அரசு செய்ததைப்போல இன்னொரு தண்ணி தொட்டியை கட்டவேண்டாம்.இந்த பதிவு பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்.
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
17-நவ-201912:15:20 IST Report Abuse
வந்தியதேவன் ////குஜராத் நிறுவனம்//// செய்யுங்க.. செய்யுங்க... இப்படியே ஆடுங்க? எவ்வளவு நாள் ஆடுவீங்க? ஒரு அஞ்சு வருஷம்... பத்து வருஷம்... அப்புறம்... ஜனங்களுக்கே போரடிச்சுடும்... இப்ப ஆதரவா கமெண்ட் போடுற அதிமேதாவிங்க... அன்னைக்கு இவங்கள கழுவி... கழுவி ஊத்துவாங்க.... இறுதியாக.. கத்தி பிடித்தவனின் மரணம் கத்தியாலே என்பது வழக்குமொழி ஒன்றுண்டு... அது கத்தியை கையில் எடுத்தவன் வாழ்க்கை நடந்தே தீரும்...
Rate this:
Share this comment
KV Pillai - Chennai,இந்தியா
17-நவ-201915:14:51 IST Report Abuse
KV Pillaiசரியாக சொன்னீர்கள். இப்போது போற்றுபவர்களும் விரைவில் தூற்ற ஆரம்பிப்பார்கள். ஆனால் அது காலம் கடந்த ஞானோதயமாகவே இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
GBR -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201911:40:49 IST Report Abuse
GBR better to change the capital. it is highly polluted. not safe for citizens to live.
Rate this:
Share this comment
atara - Pune,இந்தியா
17-நவ-201914:11:27 IST Report Abuse
ataraStill the Capitial is Union Terriotery, change the Capitial to Mathya pradesh so Accessiblity is more or less same distance from other states...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
17-நவ-201915:12:30 IST Report Abuse
RayYES THAT IS WHAT THEIR ANCESTOR DUKLAQ DID...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X