ஆத்தூர் : சேலம் ஆத்தூரில் தனியார் பஸ் ஒன்று டூவிலர் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (40) இவர் தன் இரண்டு குழந்தைகளுடன் (நித்யா, சக்திவேல்) டூவிலரில் காலை 5.45 மணியளவில் கெங்கவல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் -பெரம்பபலூர் தேமிய நெடுஞ்சாலையில் வரும்போது, திருச்சியிலிருந்து வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.