பொது செய்தி

இந்தியா

விரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (122)
Advertisement

புதுடில்லி : வரும் மார்ச் மாதத்திற்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.





ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்டி, இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளும் முடிவுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கள நிலவரங்கள் குறித்து ஆராயப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் ஏதும் வராததால் ஓராண்டுக்கு முன்பே, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை விற்க முடியாமல் போனது.





பொருளாதார மந்தநிலை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல துறைகள் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளன. சில துறைகளில் ஜிஎஸ்டி., வரி வசூலால் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201922:06:37 IST Report Abuse
Tamilan ஜெட் ஏர்வேஸ், BSNL , என ஒவ்வொன்றாக விற்பது அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது . நல்லவிலைக்கு விற்பது என்னவோ கேட்கும்படி இருந்தாலும் இது அரசை சந்தையில் உள்ள குண்டர்களுக்கு அடகு வைத்து விலையை ஏற்றியது என்பது கேவலமான ஒன்று . ஆனால் உலக தரம் வாய்ந்த ஒன்று என்று உலகம் கூறுகிறது .
Rate this:
Share this comment
AYYA - Chennai,இந்தியா
17-நவ-201923:31:46 IST Report Abuse
AYYAதம்பி - ஜெட் ஏர்வேஸ் தனியார் கம்பனி. அதை விற்பது அவர்கள் முடிவு....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201921:57:34 IST Report Abuse
Tamilan அரசு நஷ்டத்தில் போவதை விற்றால் , அம்பானியும் ஆதனியும் லாபத்தில் இயங்குவதை விற்கிறார்கள் . ஒருவர் தான் 50 வருடம் அரசின் துணையுடன் சேர்த்த சொத்துக்களை லச்சக்கணக்கான் கோடிகளுக்கு விற்றால், மற்றொருவர் ஆரம்பித்த ஓரிரண்டு வருடங்களிலேயே ஆயிரக்கணக்கான் கோடிக்கு விற்கிறார் . பொருளாதாரம் , உலகமயம் , தாராளமயம் என்ற போர்வையில் இவர்களுக்கு நாட்டை(ஒரு பகுதியை ) யாரும் பட்டா போட்டு கொடுத்துவிட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201921:50:29 IST Report Abuse
Tamilan இந்தியாவே பிரச்சினையில் பிறந்ததுதான் . பிரச்சினையிலேயே வளர்ந்து பிரச்சினையிலேயே தான் இன்றும் இருக்கிறது . இந்தியாவையும் விற்று விடவேண்டியதுதான் . அரசியல், அரசியல் சட்டத்தில் உள்ளவர்கள் விற்க மாட்டார்கள் என்பதில்லை. அனைத்தையும் விலைகொடுத்து வாங்கும் தகுதி பணம் யாரிடமும் இல்லை என்ற ஒரு குறைதான் இவ்வளவு நாட்கள் விற்காததற்கு காரணம் . இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு முன் இருந்தவர்கள் தொலைந்து போய்விடவில்லை , ஆங்கிலேயர்கள் வரவுக்காக காத்திருந்தவர்கள் காணாமல் போய்விடவில்லை என்பதைத்தான் இதெல்லாம் உணர்த்துகின்றன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X