கரும்புக்கு சொட்டு நீர் பாசன மானியம் உயர்வு: தொகை விபரம் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்புக்கு சொட்டு நீர் பாசன மானியம் உயர்வு: தொகை விபரம் வெளியீடு

Added : நவ 17, 2019

ஈரோடு: கரும்பு பயிருக்கு, சொட்டு நீர் பாசனத்தில் உயர்த்தப்பட்ட, மானியத்தொகை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கரும்பு, வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களில் நீர் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில், வேளாண், தோட்டக்கலை துறை மூலம், சொட்டு நீர் பாசன வசதி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, அனைத்து வித பயிர்களுக்கும் ?ஹக்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ஒரு ?ஹக்?டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாவதால், மானியத்தொகையை உயர்த்த கோரினர். இதன்படி, கரும்புக்கு மட்டும் மானியம் உயர்த்தி, விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X