பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : நவ 17, 2019
Advertisement

வாய்க்காலில் குவியும் குப்பை: கோபி அத்தாணி சாலையில், பதியை கடந்து கூகலூர் கிளை வாய்க்காலில், கீரிப்பள்ள ஓடை கழிவுநீர் சேர்கிறது. இந்த இடத்தில் உள்ள பாலத்தில், செடி மற்றும் கொடிகளுடன், குப்பையை குவிக்கின்றனர். இதனால் கழிவுநீர் பாதையை அடிக்கடி, குப்பை அடைத்து கொள்கிறது. இதனால், பதி வரை கழிவுநீர் தேங்கி, கோபி டவுனுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், குப்பை தேங்காமல் இருக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறான தளவாடம்: ஈரோடு பி.எஸ்., பார்க் பகுதியில் திட்டப் பணிகளுக்காக கொண்டு வந்து போடப்பட்ட இரும்பு தளவாடங்களில், சில அங்கேயே போடப்பட்டு விட்டன. திரும்பி எடுத்து செல்லவில்லை. இதனால் மாலை நேரத்தில் இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள், இரும்பு தளவாடங்களின் மீது இடித்துக்கொண்டு கால்களை காயப்படுத்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. களவு போகும் முன், இதை அப்புறப்படுத்தி, உரிய இடத்தில் சேர்க்கலாமே?

புதருக்குள் கிடக்கும் குப்பைத்தொட்டி: அந்தியூர் யூனியன், சங்கராபாளையம் பஞ்., எண்ணமங்கலம் பிரிவு சாலையில், புத்தம் புதியதாக ஐந்து குப்பைத் தொட்டிகள், சமுதாயக் கூடத்தின் அருகில் போட்டு வைத்துள்ளனர். பஞ்., வார்டுகளில் குப்பை சேகரிக்க ஒதுக்கி தராமல், இங்கு ஓரம் கட்டியதற்கான காரணம் தெரியாமல், மக்கள் முழிக்கின்றனர். புதர்கள் இடையே குப்பைத் தொட்டி வீணாகும் முன், வார்டு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க, சங்கராபாளையம் பஞ்.,மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோழி கழிவால் சுகாதார சீர்கேடு: பவானிசாகர் ஒன்றியம், முடுக்கன்துறை வாரச்சந்தை பகுதியில், கோழிக்கடை நடத்துவோர், வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு செல்லும் சாலையோரத்தில், கழிவுகளை கொட்டுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால், அவ்வழி செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். காற்றில் பறக்கும் கோழி இறகு வாகன ஓட்டிகள் மீது விழுவதால் தடுமாறுகின்றனர். கூட்டுறவு வங்கிக்கு செல்லும் மக்கள் பாதிக்கின்றனர். கழிவு கொட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?

முட்செடி அதிகம்; வீரர்கள் சிரமம்: ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானம், மூன்று மாதங்களுக்கு மேல் சுத்தம் செய்யப்படாமல், தற்போதைய மழையால் அதிக அளவில் செடி, முட்செடி வளர்ந்துள்ளது. இதனால் ஓய்வாக அமரக்கூட முடியாமல் வீரர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பூச்சி, விஷ ஜந்துக்கள் அதிகமாக நடமாடுவதால், அவ்வளாகத்தில் உள்ள விடுதி மாணவியரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X