பொது செய்தி

இந்தியா

ராஜபக்சே வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பலன் கிட்டுமா ?

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (31)
Advertisement

புதுடில்லி : இலங்கையில் புதிய அதிபர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (நவ.,17) எண்ணப்பட்டன.


இலங்கை தேர்தல் நிலவரத்தை ஆரம்பம் முதலே இந்தியா மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சீனா, இந்திய பெருங்கடல் பகுதியில் சாலை அமைப்பதை தீவிரப்படுத்தி வருகிறது. 2017 ம் ஆண்ட இலங்கையின் கம்பன்டோட்டா துறைமுகத்தை ஆக்கிரமித்த சீனா, இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகிறது. ஆனால் இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு மிக அருகே சீனா, தனது பலத்தை விரிபடுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை. இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகளும் கூட, இந்திய கடல் பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை நிறுத்தி வருவதை விரும்பவில்லை. இலங்கையின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனா பில்லியன் கணக்கில் டாலர்களை நிதியாக வழங்கி வருகிறது. இதற்கு இலங்கையின் முந்தைய அதிபர் மகிந்திர ராஜபக்சே ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவின் உறவினரான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு சீனா நெருக்கடி கொடுக்க வழிவகுக்கும்.

அத்துடன் இலங்கை போர் குற்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருக்காது என கருதுகிறது. இலங்கை தேர்தலில் வேட்பாளர்கள் பலருக்கு சீனா சட்ட விரோதமாக பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு எதிராக கடல்வழி ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்களில் இலங்கையும், சீனாவும் ஈடுபட எளிதாகி விடும்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
17-நவ-201922:30:29 IST Report Abuse
Girija தமிழா தமிழா காஷ்மீரும் கன்யாகுமரியும் இனிமேல் ஒன்றேதான்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-நவ-201920:49:13 IST Report Abuse
Sanny ராஜபக்சேயால் பலன் இருக்கா என்பதை விட, இவர் முன்பு இலங்கையில் இருந்த பிரதமர்கள், ஜனாதிபதிகள் போல அல்ல இவர் கோட்டாபய, இவர் யாருக்கு அடங்காதவர், அண்மையில் இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலாவை சந்தித்தபோது, எதிர்க்கட்சிகள், தமிழ்கட்சிகள், இந்திய உளவுத்துறை சொன்ன அவரின் தவறான போக்குகளை மைத்திரிபால சிறிசேனைக்கு தலையில் குட்டாத குறையாக அவரை நம்ம மோடிஜி அவர்கள் கண்டிப்புடன், கோபத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம், அவர் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாராம், ஆனால் இவர் கோட்டாபய அப்படி பொறுமையாக எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமாட்டார், ஏதாவது ஏடாகூடமாக சொல்வார் , அல்லது எதிர் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்,
Rate this:
Share this comment
Cancel
Rajanram - London,யுனைடெட் கிங்டம்
17-நவ-201919:58:22 IST Report Abuse
Rajanram It is unnecessary to have fear about new President of Lanka. India needs money to build India. India can not give same amount of money to Lanka as China give. Lanka will not bypass India. India and China are moving closer to each other in many fronts. China is neighbour of India. Neighbours should live together peacefully for their own sake in order achieve prosperity. Only NGO funded Tamil fronts and their leaders will be happy about Gotabaya Rajapakse's victory because they can get more money to keep tense situation between Tamils and Sinhalese, and India (Tamil Nadu) and Lanka. NGO stops funding these elements when non Buddhists are in power in Lanka. Tamils and Sinhalese in Lanka celebrate same new year in April. Sinhalese worships our "ARASA MARAM".which we worship. There is no issue between the Tamils and Sinhalese. Actually Tamil areas, Tamil business, state officials in Tamil areas, and Tamil worshipping centres, are being surrounded and occupied by foreign religious communities. In order to hide these type occupation, Tamil and Sinhalese tension is being artificially d by NGOs. Lets common sense prevail everywhere.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X