அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அலட்சியம்: ஸ்டாலின் வேதனை

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement
சூலூர் கோவையில், அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால், லாரி மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு, ராஜேஸ்வரி பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, திமுக சார்பில ்ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர், நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், கால் முறிவு ஏற்பட்ட பெண்ணின் ஒரு கால்
stalin, dmk, dmk chief stalin,  dmk stalin, M.k.stalin, திமுக, தி.மு.க., திராவிட முன்னேற்ற கழகம், ஸ்டாலின்,மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்

சூலூர் கோவையில், அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால், லாரி மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு, ராஜேஸ்வரி பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண்ணை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, திமுக சார்பில ்ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர், நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், கால் முறிவு ஏற்பட்ட பெண்ணின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை பள்ளிகரணையில், அதிமுக பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்ற இளம் பெண் அதே இடத்தில் உயிரிழந்தார். இப்போது, கோவை சிங்காநல்லூரில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது, நினைத்து பார்க்க முடியாதது. லாரி டிரைவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். அனால், கொடிக்கம்பம் வைத்தவர்கள், விழா நடத்தியவர்கள், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த விஷயம் வெளியில் வந்துவிடக்கூடாது என அரசு முயற்சி செய்கிறது. அதையும் மீறி செய்தி வந்துள்ளது. விபத்து தொடர்பாக முதல்வரிடம் கேட்ட போது முதல்வர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். விபத்து சம்பவம் தனக்கு தெரியாது. செய்தி வரவில்லை என கூறுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தனக்கு தெரியாது எனக்கூறியது போல், இந்த சம்பவமும் தெரியாது என்கிறார். இது வெட்கப்படக்கூடியது. வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மிசா விவாதம் முட்டாள்தனமானது


சேலம் : சேலத்தில் "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்" என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின், திமுக.,வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானது தான் மிசா விவாதமும். மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்? திமுக., தலைவர்கள் பலரும் பல்வேறு சிறைகளில் இருந்தனர். மிசாவில் நான் சிறையில் இருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல பொய்யான சர்ச்சைகள் பரப்பப்படுகிறது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான். ஆட்சி கலைந்தாலும் நெருக்கடி நிலையை ஆதுரிக்க மாட்டேன் என கூறியவர் கருணாநிதி. தற்போது நடைபெறும் ஆட்சியின் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு மீதமுள்ளது. அதனால் நாம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
23-ஜூலை-202019:58:53 IST Report Abuse
ocean சோழியன் குடுமி சும்மா ஆடாது.இந்த மாதிரி வேலை எல்லாம் ஓட்டுக்காகத்தான்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
24-நவ-201914:19:48 IST Report Abuse
sankar வீட்டுக்குள்ள எதுக்கு கருப்பு கண்ணாடி ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
18-நவ-201920:40:47 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலினின் வேதனை அவர் அமர்ந்திருக்கும் முறையிலேயே தெரீது ,எப்பவுமே வலது புறமே சரிந்திருக்கிறார்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-நவ-201904:15:28 IST Report Abuse
Matt Pமூல உபத்திரவமாயிருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X