பொது செய்தி

இந்தியா

காற்றின் தரம் உயர்வு : இயல்பு நிலைக்கு திரும்பும் டில்லி

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : தலைநகர் டில்லியில் ஒருவாரத்திற்குப் பிறகு, வார இறுதி நாட்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றில் நச்சு தன்மையின்றி இயல்பாக சுவாசிக்க முடிவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.டில்லியில் காற்றின் தர மதிப்பீடு நேற்று 357 புள்ளிகளாக இருந்த நிலையில் இன்று 218 ஆக குறைந்ததுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமையன்று (நவ.,15) காற்றின் தரம் 458 என்ற

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தலைநகர் டில்லியில் ஒருவாரத்திற்குப் பிறகு, வார இறுதி நாட்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றில் நச்சு தன்மையின்றி இயல்பாக சுவாசிக்க முடிவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



latest tamil news



டில்லியில் காற்றின் தர மதிப்பீடு நேற்று 357 புள்ளிகளாக இருந்த நிலையில் இன்று 218 ஆக குறைந்ததுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமையன்று (நவ.,15) காற்றின் தரம் 458 என்ற அபாய நிலையில் இருந்தது. இதற்கு முன் நவ., 10 ம் தேதி தான் காற்றின் தரம் 321 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. புறநகர்ப் பகுதிகளான பரிதாபாத், காசியாபாத்,நொய்டா, குருகிராம் போன்ற இடங்களிலும் மாசு நிலையில் சரிவு காணப்பட்டது.


latest tamil news


பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது குறைந்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மாசு அளவு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். தொடர்ந்த கடந்த 4 நாட்களாக நச்சுத்தன்மையுடனும், புகை மண்டலமாக காட்சி அளித்த டில்லி நகரில், இன்று இதமான காற்றும், வெயிலும் காட்சி தருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
17-நவ-201916:21:07 IST Report Abuse
N.K பிரச்சனை தற்காலிகமான இருப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் நாம் மறந்துவிடுகிறோம். சென்னை வெள்ளமும் இப்படித்தான். வருடம் முழுவதும் பிரச்னையை அனுபவித்தால் ஒருவேளை நமக்கு புத்தி வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X