இலங்கை அதிபராகிறார் கோத்தபயா ராஜபக்சே

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணும் பணி துரிதமாக நடந்தது. கோத்தபய ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி, 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதன்படி கோத்தபயா இலங்கையின் 7 வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.






அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று ( 16 ம் தேதி ) நடந்தது. இத்தேர்தலில்,கோத்தபயா ராஜபக்சேயின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்கும் , சஜித் பிரேமதாசாவின் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.


1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 845 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளுக்கு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு படையினர், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டளிக்க விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்தது.






அதன்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி ( 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச ( 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ) ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதன்படி 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் கோத்தபயா கட்சி கூடுதலாக பெற்றுள்ளது.


சாமி வாழ்த்து


பாஜ., மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர். இந்தியாவுக்கு நல்லது, என பதிவிட்டுள்ளார்.


கோத்தபயா டுவிட்


அதிபராக இருக்கும் கோத்தபயா ராஜபக்சே அவரது டுவிட்டரில்;
இலங்கைக்கான ஒரு புதிய பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது, ​​அனைத்து இலங்கை மக்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நினைவில் கொள்வோம். நாங்கள் பிரசாரம் செய்த அதே வழியில் கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக மகிழ்வோம்.



ரணில் ராஜினாமா ?


இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
17-நவ-201921:32:47 IST Report Abuse
jagan கொலைகாரக கூட்டத்தை ஒழித்த ராஜபக்ஷே தம்பி ஜெயித்தது நல்லதே
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
17-நவ-201920:37:05 IST Report Abuse
Ramakrishnan Natesan இந்தியாவில் படிப்பு அமெரிக்கக் குடியுரிமை சீனாவுடன் நெருக்கம் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை நிகழ்த்தியதில் முக்கிய பங்காற்றியவர் கோத்தபய ராஜபக்ச.
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
17-நவ-201920:05:29 IST Report Abuse
Endless இந்திய பெருங்கடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது..... ஆட்டம் ஆரம்பம்....
Rate this:
Share this comment
Naren - Chennai,இந்தியா
17-நவ-201921:40:16 IST Report Abuse
Narenஇரண்டு நாட்டினரையும் சும்மா உசுப்பேத்தி கொண்டிருப்போரை நினைத்தால் எனக்கு ஒருவித அச்சம் வருகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X