வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் : கேரளாவில், கிராமம் ஒன்றில்,ஹிந்து பெண் ஒருவரின் திருமணத்திற்காக, மிலாது நபி கொண்டாட்டத்தை முஸ்லிம்கள் தள்ளி வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள பலேரி கிராமத்தல் உள்ள இடிவெட்டி பகுதியில் மசூதி உள்ளது. மசூதி அருகே ஹிந்து குடும்பம் ஒன்று உள்ளது. வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி முஸ்லிம் சிறுவர்கள் படிக்கும் அரபி பாடசாலையும் உள்ளது. கேரளாவில் நவ.,10ம் தேதி மிலாது நபி கொண்டாட்டங்கள் நடந்தன. அதற்கு முந்தைய வாரம், மசூதியில் மிலாது நபி கொண்டாட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, மசூதி அருகே வசித்த ஹிந்து குடும்பத்தை சேர்ந்த பிரதிஷா என்ற பெண்ணுக்கும், பிரசாத் என்பவருக்கும், மிலாது நபி நாளில், அவரது வீட்டு வளாகத்தில் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ஜமாத் நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மிலாது நபி கொண்டாட்டத்தை ஒரு வாரம் தள்ளி வைப்பது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மிலாது நபி கொண்டாட்டத்தை, ஹிந்து குடும்பத்தினர் தள்ளி வைக்கும்படி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. முஸ்லிம்களாக முன்வந்து கொண்டாட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். இந்த முடிவை பலரும் பாராட்டினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement