சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு

Added : நவ 17, 2019 | கருத்துகள் (27)
Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், அர்ச்சனை செய்ய வந்த நர்சை, கன்னத்தில் அறைந்ததாக, தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வ.வு.சி., தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று(நவ.,16) இரவு நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, முக்குருணி விநாயகர் சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்ய கூறியுள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தீட்சிதர், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லதாவின் கன்னத்தில் அறைந்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-நவ-201911:02:00 IST Report Abuse
Bhaskaran அடாவடி செய்பவர்கள் தீட்சிதர்கள்
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
18-நவ-201903:38:11 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி அந்த மந்த்ரகாரவுங்க அடிகிளியமா ஸ்ட்ரோங் ஆ தட்டீவச்சீட்டங்கலமா. ஹெல்மெட் போட்டூடூ தா போவோனும். ந்த கோர்ட் காரவுங்க அப்டி தா சொன்னங்கலமா. கடீசீவச்சிருக்கலமில்ல.
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201902:37:54 IST Report Abuse
Ganesan Madurai நம்புவதற்கு கடினமாக உள்ளது. திருட்டு திராவிட பாவாடை கும்பலின் சதியை மறுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X