பொது செய்தி

இந்தியா

மோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபயா ராஜபக்சேவிற்கு , பிரதமர் மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு கோத்தபயா நன்றி தெரிவித்துள்ளார்.மோடியின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த உறவு, சகோதரத்துவ நட்பை வலுப்படுத்தவும், மக்களுக்காகவும்,
கோத்தபயா, மோடி வாழ்த்து, இலங்கை அதிபர் தேர்தல், பிரதமர் மோடி, நரேந்திர மோடி, Kottappaya, kottapaya rajapaksa, Pm Modi,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இலங்கை அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபயா ராஜபக்சேவிற்கு , பிரதமர் மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு கோத்தபயா நன்றி தெரிவித்துள்ளார்.
மோடியின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த உறவு, சகோதரத்துவ நட்பை வலுப்படுத்தவும், மக்களுக்காகவும், அமைதி, வளர்ச்சி, இந்த பிராந்தியத்தில், அமைதிக்காகவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.


latest tamil news



மோடியின் டுவிட்டர் பதிவு:



latest tamil news



இதற்கு நன்றி தெரிவித்து கோத்தபயா ராஜபக்சே வெளியிட்ட டுவிட்டரில்: கூறியதாவது வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது இரு நாடுகளும், வரலாறு மற்றும் பொது நம்பிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளன. நமது நட்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




தொலைபேசியில் வாழ்த்து


மேலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட மோடி, கோத்தபயாவை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலக டுவிட்டரில், இந்திய மக்கள் சார்பாகவும், தன் சார்பாகவும் வாழ்த்துகள். உங்களின் திறமையின் கீழ் இலங்கை மக்கள் அமைதி மற்றும் செழிப்பான பாதையில் மேலும் முன்னேறுவர் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கிடையேயான காலாசாரம், சகோதரத்துவம், வரலாற்று மற்றும் நாகரீக உறவுகள் மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். விரைவில் இந்தியா வாருங்கள், என கூறியதாக பதிவிட்டுள்ளது. இதற்கு கோத்தபய சார்பில், நன்றி தெரிவித்ததாகவும், இந்தியா வருவதற்கான மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-நவ-201917:33:25 IST Report Abuse
Malick Raja இலங்கையில் எதிர்க்கட்சி என்பது தேர்தலின்போது மட்டும்தான் .. இரண்டு கட்சிகளும் ஒரு கொள்கையை கொண்டதே . கண்துடைப்புக்காக தேர்தல் அவ்வளவுதான் ..
Rate this:
Cancel
17-நவ-201915:48:55 IST Report Abuse
ஆரூர் ரங் 2 இலங்கைக கட்சிகளுமே தமிழர் மற்றும் இந்திய வெறுப்பரசியலையே போட்டிபோட்டு நடத்தி சிங்கள இனத்தை தவறாக வழிநடத்தி மிருகத்தனத்தில் வாழ்கின்றனர் .கோத்தபய ராஜபக்சே வெற்றியால் மகிழப்போவது நம்மிடம் கொள்ளையடித்த 28000 கோடி பணத்தை இலங்கையில் முதலீடு செய்துள்ள மானகெட்ட தீயமூகதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X