சாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (21)
சாலை விபத்துகள், தமிழகம், வடகிழக்கு மாநிலங்கள்,

இந்த செய்தியை கேட்க

கவுகாத்தி: கடந்த 2018ல் இந்தியாவில், அதிக சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 63,920 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதே நேரத்தில், சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாலைகளில் தான் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. சாலை விபத்துகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்கள் குறித்த பட்டியலில், வடகிழக்கு மற்றும் யூனியன் பிரதேசங்கள் கீழே உள்ளன. கடந்த 2018ல் சாலை விபத்துகள் காரணமாக அசாம் மாநிலத்தில் மட்டும் 2,966 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அசாம், 18வது இடத்தில் உள்ளது.

நாகாலாந்து , மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகியவை 25 முதல் 33 இடங்கள் வரை உள்ளன. லட்சத்தீவில் ஒருவரும், அந்தமான் நிகோபாரில் 18 பேரும், டாமன் டையூவில் 34 பேரும், உயிரிழந்துள்ளனர். 2017ல் சாலை விபத்துகள் தொடர்பான மரணங்களை குறைக்க மணிப்பூர், மசோதாரம், நாகாலாந்து அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. இதனால், மேகாலயாவில் , முந்தைய ஆண்டில் ஏற்பட்ட இறப்புகள் தான், 2018ல் ஏற்பட்டது. ஆனால், அசாம், திரிபுரா, சிக்கிமில் உயிரிழப்புகள் அதிகரித்தது.

கடந்த 2018 ல் சாலை விபத்துகளின் எண்ணிக்கை:
தமிழகம்- 63,290
அசாம்- 8,248(16வது இடம்)
மிசோரம் 53(35வது இடம்)
சிக்கிம் 32வது இடத்திலும்,
அருணாச்சல பிரதேசம் 30வது இடத்திலும்
மணிப்பூர் 25வது இடத்திலும்,
திரிபுரா 26வது இடத்திலம்,
நாகலாந்து 27 வது இடத்திலும்
மேகாலயா 28 வது இடத்திலும் உள்ளன.
சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை:
அசாம் -2,782
திரிபுரா -219
மணிப்பூர்- 166
நாகலாந்து-90
அருணாச்சல பிரதேசம் - 74
சிக்கிம்- 61
மேகாலயா-23
மிசோரம் - 16

பெரும்பாலான சாலை விபத்துகள், உயிரிழப்பு, காயம் ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளில் தான் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான நான்கு சக்கர வாகனங்கள் தான் விபத்துகளை சந்தித்தன. மேகாலயாவில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களில், அதிவேக பயணம் காரணமாகவும் சாலை விபத்துகள் ஏற்பட்டன. சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் உ.பி., முதலிடம் உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X