தமிழர்களுக்கு எதிரானவரா கோத்தபயா ?

Added : நவ 17, 2019 | கருத்துகள் (19)
Advertisement
தமிழர்கள்,  கோத்தபயா ராஜபக்சே? இலங்கை, தேர்தல்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார் கோத்தபயா ராஜபக்சே 70. இவர் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக் ஷேவின் தம்பி. அரசியல்வாதி, தொழில்நுட்ப நிபுணர், ராணுவ அதிகாரி என பன்முகம் கொண்டவர் கோத்தபயா .


யார் இந்த கோத்தபயா ?


கடந்த 1949 ஜூன் 20ல் அம்பாந்தோட்டையில் உள்ள வீரகேட்டியா கிராமத்தில் கோத்தபயா பிறந்தார். எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தார். இவரது தந்தை டி.ஏ.ராஜபக்சே மத்திய அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்தவர். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேர். இதில் மகிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தவர். சமல் ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே , எம்.பி.,க்களாக உள்ளனர்.
கோத்தபயா இலங்கை ராணுவத்தில் 1971ல் சேர்ந்தார். 1983 - 84 வரை யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவப் படையில் பணியாற்றினார். 20 ஆண்டுகள் ராணுவ பணிக்கு பின், 1992ல் ஓய்வு பெற்றார். கொழும்பு ஐ.டி., நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜரானார்.

1998ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினார். 2005ல் இவரது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு அதிபர் தேர்தலில் உதவுவதற்காக இலங்கை திரும்பினார். பின் மகிந்தா அமைச்சரவையில் 2005 - 2015 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் நகர் வளர்ச்சி துறையில் செயலராக பணியாற்றினார். இவரது தலைமையில் செயல்பட்ட இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகளை வென்று, உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது.போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.


கண்டிப்பானவர்


சிங்களர்கள் மத்தியில் 'பயங்கரவாதத்தை தோற்கடித்தவர்' என்ற பெருமை உள்ளது. 2019 ஆக., 11ல் மகிந்தாவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக கோத்தபயா அறிவிக்கப்பட்டார். இலங்கை மற்றும் அமெரிக்கா என இரண்டு குடியுரிமை வைத்துள்ளதாக இவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. குறைந்த அளவே பேசி செயல் திறம் மிக்கவர். மேலும் அவர் கண்டிப்பானவர் என்ற பெயரும் உண்டு.

தமிழர்ளுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவர் தமிழர்களை அரவணைப்பாரா ? என்பதை போக, போகத்தான் பார்க்க முடியும். 51 சதவீத ஓட்டுகளை பெற்று அதிபராக முடிசூட உள்ளார் கோத்தபயா.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-201923:57:45 IST Report Abuse
நிஷார் ஆம்
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
17-நவ-201921:57:18 IST Report Abuse
Charles எனக்கு அந்த பால் வடியும் முகம் கொண்ட பிரபாகரனின் மகனை மனதை விட்டு நீக்க முடியவில்லை.. குழந்தைகளை கூட விடாத ராணுவத்தை என்னென்று சொல்வது எந்த கொடுமைகளுக்கு அங்கு ஆளானவர்களை மறக்காமல் இருப்பதர்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பினர் ஆனால் இவர் மகா பெரியவர் ஆவர்.. குழந்தைகளை கொல்லுவதுபண்பின் அடையாளமில்லை,,
Rate this:
Share this comment
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
18-நவ-201901:49:17 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலைஎனக்கு கூட பால் வடியும் முகங்கள் கொண்ட பிஞ்சு குழந்தைகளை கேடயமாக உபயோகித்த பிரபாகரன் மீது கோபம் தான்... பள்ளி குழந்தைகள் கையில் குண்டுகளா குடுத்து விடுவான் அந்த அயோக்கியன்...
Rate this:
Share this comment
mei - Colombo,இலங்கை
19-நவ-201913:20:26 IST Report Abuse
meiநீ பாத்தியா...
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
17-நவ-201921:18:01 IST Report Abuse
Naren அவர்கள் நாட்டு மக்களை எப்படி காப்பது என்பது அவர்களுக்கு தெரியும். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதே எல்லோருக்கும் உத்தமமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X