கர்நாடகா:வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (28)
Advertisement
Karnataka, BJP, MLA, Nagaraj, கர்நாடகா, இடைத்தேர்தல், பாரதியஜனதா, எம்எல்ஏ, நாகராஜ், சொத்துமதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் பாஜ., சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ., நாகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், அவருக்கும் அவரது மனைவிக்குமான சொத்து மதிப்பு ரூ.1201.5 கோடியாக கணக்கு காட்டியுள்ளார். இதனால் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ வேட்பாளரானார்.

கர்நாடகாவில் முந்தைய மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி காலத்தில், இரு கட்சிகளை சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த தொகுதிகளுக்கு டிச.,5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் 15 பேர் பாஜ.,வில் சேர்ந்ததால், அவர்களில் 13 பேர் பாஜ., சார்பில் போட்டியிடுகின்றனர். இதில், முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த நாகராஜ் என்பவர், ஹொஸ்கோதே தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை பார்த்து, அனைவரும் அதிர்ந்து போயினர். அதில், நாகராஜ் மற்றும் அவரது மனைவிக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ. 1201.50 கோடி என பதிவிட்டுள்ளார். மேலும், அதில் இணைக்கப்பட்ட வங்கி ஆவணங்களின் மூலம், 2018ம் ஆண்டில் போட்டியிடும்போது அவரது சொத்தை விட, 18 மாதங்களில் ரூ.185 கோடி உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், கடந்த ஆக.,2 முதல் 7 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அவரது வங்கி கணக்குகளில் ரூ.48 கோடி அதிகரித்துள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201910:46:12 IST Report Abuse
ஸாயிப்ரியா (தந்தை)யர் நாடென்ற போதினிலே பல கோடிகள் பெருகுது அரசியலிலே. மேலும் மேலும் செல்வம் வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201907:33:12 IST Report Abuse
ஆரூர் ரங் மந்திரியாயிருக்கும் ஐந்தாண்டில் 13மடங்கு சொத்து அதிகமானதாகக் காட்டிய DMK MP ஜெகத்ரட்சகனை ஏதாவது சொல்கிறோமா? அப்போது சிலகோடி வைத்திருந்தவர் இப்போது சிங்கள பகுதியில் 28000 கோடி முதலீடு செய்துகொண்டிருப்பதைக் கண்டுகொள்வதில்லையே . அது கட்சிபணமான்னு கேள்விகேட்டோமா? கண்ணுக்குமுன் நடப்பதைக் கேள்விகேட்காமல் எங்கோ நடப்பதை கேள்விகேட்கிறோமே . ? திராவிஷனுக்கு மட்டும் கேக்காமலே மன்னிப்பா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
18-நவ-201909:56:00 IST Report Abuse
Anandanஉங்க ஆட்சிதான் வழக்குதான் தொடுத்திருக்கவேண்டும்? ஏன் இங்கு புலம்பல்....
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
18-நவ-201904:49:24 IST Report Abuse
Sundararaman Iyer Dale Carnegi Institute & Stanford College of Management have requested Mr. Nagaraj of Hoskote to head their Financial Management department to teach the Americans how to earn such a huge amount within such a short time - a world record in itself. Karnataka has the richest politicians in the world - no wonder all political parties want to capture power in Karnataka by hook or crook...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X