பொது செய்தி

இந்தியா

13 ஆண்டுக்கு பின் கொலீஜியம் குழுவில் பெண் நீதிபதி

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற்ற நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி கொலீஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொலீஜியம் என்ற குழுவின் பரிந்துரையின் பேரில்தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் இன்றுடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.


இதையடுத்து அப்பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியான பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். இனி இந்த குழுவில் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, என். வி. ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர் பானுமதி ஆகியோர் 5 பேர் இருப்பர். தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி கடந்த 2014-இல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இவர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதியாக தனது பணியை தொடங்கினார்.

அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். பின்னர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக கொலீஜிம் குழு பரிந்துரை செய்து நியமிக்கப்பட்டார். தற்போது கொலீஜியம் குழுவில் இடம் பெற்றுள்ள பானுமதியின் பதவிக்காலம் 9 மாதங்கள் மட்டுமே. இவர் அடுத்த ஆண்டு ஜூலை 19-இல் ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே பெண்கள். அந்த 3 பேர் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி, பானுமதி ஆகியோர் ஆவர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
18-நவ-201907:46:27 IST Report Abuse
Krishna There is No Justice in India. When, She is Clearly & Unconstitutionally AntiMen, Its Strange & Vested That She's Made Collegium Member. That's Why Elected People's Rep MP Committee of Justice (atleast 50% Opposition MPs as All Have Become Sheeps for Posts, Power & Money) Must Approve-Amend all Judgements Before Media Publications.
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201907:21:40 IST Report Abuse
ஆரூர் ரங் கர்த்தரின் கருணையால் Justice ஜோசப் போலவே இந்த பெண்மணியும்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-நவ-201906:43:39 IST Report Abuse
 N.Purushothaman நீதிமன்றங்களின் செயல்பாட்டை கண்காணிக்க சுதந்திரமான ஒரு அமைப்பு தேவை ....சமீப காலங்களில் கீழ் ,மற்றும் உயர் நீதிமன்றங்களில் வருகின்ற தீர்ப்பு அப்படிப்பட்ட ஒரு கண்காணிப்பு அமைப்பு தேவை என்பதை உணர்த்துகிறது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X