பொது செய்தி

தமிழ்நாடு

கமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (19)
Advertisement
Kamal60, Kamalhaasan, UngalNaan, Ilayaraja, நடிகர், கமல், கமல்60, இளையராஜா, கமல்ஹாசன்

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல் திரையுலகில் இன்னும் 60 ஆண்டுகள் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமலின் 65வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவெடுத்தது. அதன்படி, நவ.,7ம் தேதி பரமக்குடியில் கமலின் இல்லத்தில், அவருடைய அப்பா மறைந்த சீனிவாசனின் உருவ சிலையும், நவ.,8ல் சென்னை ஆழ்வார் பேட்டையில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.





அடுத்ததாக, சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.,17) கமல், திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 'கமல் 60' நிகழ்ச்சி நடந்தது. இதில், திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். அதில், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1கோடி ரூபாயை கமலும், ரஜினியும் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201912:15:55 IST Report Abuse
பச்சையப்பன் கமல் 60 ஆண்டுகள் என்ன! 120 ஆண்டுகள் கூட இருக்கட்டும். எங்கள் 2,3,4,5, என்று எல்லாக் கலைஞர்களையும் முதலமைச்சராக அமர்த்த எங்கள் தளபதி கரத்தினை வலுப்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201912:10:15 IST Report Abuse
நக்கல் சிவாஜி நடிகர் திலகம், கமல் உலக நாயகன்... இவருக்கே இது அசிங்கமா இல்ல... அவர் நடிப்பு எங்க, இவருடையது எங்கே.... ஏணி வெச்சாலும் எட்டாது.... தமிழ்நாட்டில் மட்டும்தான் தங்களுக்கு தானே பட்டம் கொடுத்துக் கொள்ளும் இந்த கேவலம்.. எனக்கு பிடித்த இளையராஜா, இசையுடன் நிறுத்திக் கொள்வது நல்லது... போயும் போயும் இந்தாளுக்கு இன்னும் 60 வயசு, நாட்டுக்கு ரொம்ப தேவை...
Rate this:
Share this comment
Cancel
Pooranan Ramasamy - BHUVANAGIRI,இந்தியா
18-நவ-201908:41:59 IST Report Abuse
Pooranan Ramasamy வாழ்த்துக்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X