பொது செய்தி

இந்தியா

2022ல் அயோத்தியில் ராமர் கோவில்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (13)
Advertisement

லக்னோ: வரும் 2022க்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்டி முடிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகள் துவங்க உள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ராமநவமி அன்று இதற்கான பணிகள் துவங்கி 2022 ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.






இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு , மற்றும் ராம் மந்திர் அறக்கட்டளையும் இடம் பெறும். குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவில் அறக்கட்டளை போன்று பல உறுப்பினர்களாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 முதல் 17 வரையில் இருக்க கூடும்.

இது குறித்த இறுதி முடிவு பிரதமர் மோடிதான் எடுப்பார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.இதனிடையே கோவில் கட்டுமானத்திற்கு அரசாங்கம் பணம் எதுவும் வழங்க கூடாது எனவும் நாடு முழுவதிலும் இருந்து மக்களிடம் நிதி பெறப்பட வேண்டும் என வி.எச்.பி கருத்து தெரிவித்து உள்ளது. மேலும் கோவிலுக்கு என தற்போது 67 ஏக்கர் நிலம் உள்ளது. கோவில் கட்ட 100 ஏக்கர் அளவிற்கு நிலம் தேவைப்படும் பட்சத்தில் 33 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.





கோவில்கட்டுவதற்கு எங்களுக்கு 33 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் எதிர் தரப்பினருக்கு கோவில் வளாகத்திற்குள் 5 ஏக்கர் நிலம் தர இயலாது. அவர்களுக்கான இடம் வேறு சில பகுதிகளில் மாநில அரசால் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதே நேரத்தில் மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் மையம் தலையிடாது. மசூதிக்கான 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கும் என கூறி உள்ளது.

இந்நிலையில் அனுமன் கர்ஹியை மையமாக கொண்டு அயோத்தியை மறுவடிவமைக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 388 ச.கி.மீ அளவில் ரிங்ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், விமான நிலையம் இன்ன பிற வசதிகளுடன் கூடிய மாஸ்டர் பிளான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-நவ-201919:41:15 IST Report Abuse
Sampath Kumar ராமர் கோவில் ஓகே நடக்கட்டும் உங்கக ராஜ்யம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் கிறுக்கன் இராமர் கோவில் செய்திக்கு சம்பந்தம் இல்லாத பல கருத்துக்களை வெளியிட்ட அறிவு ஜீவிகளுக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
18-நவ-201907:33:54 IST Report Abuse
Arasu ராமர் கோவில் கட்டுன உடனே நாட்டுல எல்லா பிரச்னையும் சரிஆகிடுமா
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
19-நவ-201907:59:51 IST Report Abuse
 Muruga Velராமர் கோவில் சிட்டுக்குருவி லேகியம்னு நெனைச்சுட்டீங்களா .....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-நவ-201914:44:23 IST Report Abuse
Chowkidar NandaIndiaஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டும் நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகி விடுமா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X