பொது செய்தி

இந்தியா

பீகார் அரசின் திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement

பாட்னா:இந்தியா வந்துள்ள பிரபல சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவன தலைவர் பில் கேட்ஸ் பீகார் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.






பிரபல சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான நற்பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார்.





இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது.மேலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல திட்டங்களையும் பில் கேட்ஸ் செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பாட்னா நகரில் சந்தித்தார். இசச்சந்திப்போது, துணை முதல்வர் சுசில் மோடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வறுமை ஒழிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக பீகார் அரசு ஆற்றிவரும் பணிகளுக்காக பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.கடந்த 20 ஆண்டுகளில் வறுமையையும் நோய்களையும் ஒழிக்கும் பணியில் சில இடங்கள் மட்டுமே பீகாரைப்போல் திறம்பட செயலாற்றி உள்ளது.
பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒரு பெண்ணைவிட, அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையால் நோய், நொடிக்கு பலியாகாமல் தனது ஐந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு தற்போது இருமடங்கு அதிகமாகி உள்ளது என இந்த சந்திப்பின்போது பில் கேட்ஸ் தெரிவித்ததாக அவரது அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பீகார் குழந்தைகளின் நோயற்ற வாழ்வு மற்றும் தரமான கல்விக்காக தொடர்ந்து உழைக்க தங்களது தொண்டு நிறுவனம் உறுதியேற்றுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் கிறுக்கன் நம் நாட்டு தொழில் அதிபர்களை கார்ப்பரேட் என்று திட்டுகிறோம், ஆனால் வெளிநாட்டு தொழில் அதிபர்களை கூட்டி வந்து நம் அரசாங்கத்திற்கு மதிப்பெண் போட சொல்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-நவ-201903:57:13 IST Report Abuse
J.V. Iyer நூற்றிற்கு இரண்டு மார்க்குக்கு பதிலாக நாலு மார்க் வாங்கியிருக்கிறார்கள். இது நூறு சதவிகிதம் முன்னேற்றம்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17-நவ-201922:11:24 IST Report Abuse
PANDA PANDI எங்க எடப்பாடி போல யாரு மச்ச..BANNER வெச்சு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X