கவலைப்படாதீங்க, சிவசேனா வருவாங்க ; பா.ஜ., நம்பிக்கை

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கவலைப்படாதீர்கள், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என அமித்ஷா கூறியதாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால்
Maharashtra, BJP, Amitshah, RamdasAthawale, Minister, ShivSena, மஹாராஷ்டிரா, பாரதியஜனதா, அமித்ஷா, ராம்தாஸ் அத்வாலே, அமைச்சர், சிவசேனா, ஆட்சி

புதுடில்லி: கவலைப்படாதீர்கள், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என அமித்ஷா கூறியதாக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு காங்., - தேசியவாத காங்., கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. இந்த கட்சிகளிடையே இன்னும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், கவர்னரை சந்திக்கும் நிகழ்வையும் சிவசேனா ஒத்திவைத்தது.


latest tamil news



இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அத்வாலே கூறியதாவது: மூடிய கதவுகளின் பின்னால் நடப்பதை வெளியிடுவது எங்கள் கட்சியின் பாரம்பரியம் இல்லை. தேர்தலுக்கு முன்னால், தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வர் என சொல்லும் போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ஆனால், தேர்தலுக்கு பின் சிவசேனா புதிய கோரிக்கையை வைக்கிறது. மஹா.,வில் குழப்பம் நீடித்து கவர்னர் ஆட்சி அமலானது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், நீங்கள் மத்தியஸ்தம் செய்தால் பிரச்னை முடிவுக்கு வரும் என்றேன். அதற்கு அவர், கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும். பாஜ., - சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் என்றார். இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
18-நவ-201910:39:38 IST Report Abuse
R. Vidya Sagar நாயுடுகாரு பாஜகவை கழட்டிவிட்டு பெரும் தோல்வியை சந்தித்தார். அது மாதிரி சிவசேனாவுக்கும் நடக்கும்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
18-நவ-201909:53:45 IST Report Abuse
Amal Anandan சிவாஜியின் நேரடி வாரிசு கடந்த தேர்தலில் MP ஆனால் சிவசேனை கட்சியில் இப்போது அதைவிட்டு விலகி பிஜேபியில் சேர்ந்து சரியான அடிவாங்கி தோற்றுவிட்டார் இப்படி பல காட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து சென்ற முறை ஆட்சி அமைத்தனர் இந்த முறையும் பலரை இழுத்தது மராட்டிய மக்களை ரசிக்க வைக்கவில்லை அதன் பலன்தான் இடங்கள் குறைந்தது. திருந்த வாய்ப்பே இல்லை இவர்கள்.
Rate this:
Cancel
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
18-நவ-201909:37:24 IST Report Abuse
GURU PURU INDIAN இழவுகாத்த கிளியைப்போல என்று சொல்லு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X